சின்னத்திரை ரசிகர்கள் கடந்த வாரம் முழுவதும் இஷ்டப்பட்டு பார்த்த சீரியல் எது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்தவகையில் இந்த வாரத்திற்கான விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வைரலாக பேசப்படுகிறது.
இதில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மகா சங்கமம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த இரண்டு சீரியல்களும் ஏற்கனவே டிஆர்பி டாப் லிஸ்டில் இருக்கும் சீரியல்கள் என்பதால், இந்த இரண்டு சீரியல்களை இணைத்தால் நிச்சயம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது தெரிந்தே விஜய் டிவி இந்த அஸ்திரத்தை பயன்படுத்தி இருக்கிறது.
அதற்கேற்றாற்போல் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களின் மகா சங்கமம் டிஆர்பி ரேட்டிங் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியலில் இதய மாற்று அறுவை சிகிச்சையை விறுவிறுப்பாக கொண்டுசென்று டிஆர்பி யில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.
இதையடுத்து ராஜா ராணி2 சீரியலில் பார்வதி திருமணத்தில் ஏற்பட்ட விருவிருப்பு ரசிகர்களின் மனதைக் கவர்ந்து டிஆர்பி மூன்றாம் இடம் பிடித்திருக்கிறது. நான்காம் இடம் விருவிருப்பான கட்டத்தை கடந்த வாரம் முழுவதும் காண்பித்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் பெற்றுள்ளது.
பிடிக்காத திருமணத்தை நடத்தி வைத்து அதில் அவர்கள் படும் பாட்டை காட்டிக்கொண்டிருக்கும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஐந்தாம் இடத்தையும் பிடித்திருக்கிறது. இதைப்போன்றே மௌன ராகம் 2, தென்றல் வந்து என்னைத் தொடும், முத்தழகு, காற்றுக்கென்ன வேலி போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றுள்ளது.
இதைப்போன்று சன் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் எப்பொழுதுமே முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் கயல் சீரியல் மீண்டும் அதே இடத்தை எந்த சீரியலுக்கும் விட்டுக்கொடுக்காமல் டிஆர்பி-யில் முதலிடத்தையும், அண்ணன் தங்கை பாசப் போராட்டத்தை அழகாக கண்டிக்கும் வானத்தைப்போல சீரியல் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறது.
தன்னை ஒதுக்கி வேறு ஒரு பெண்ணுடன் வாழும் கணவனுக்கு தக்கப் பாடம் புகட்டும் சுந்தரி சீரியல் மூன்றாம் இடத்தையும், ஆக்ஷன் காதல் கலந்த ரோஜா சீரியல் நான்காம் இடத்தையும், ரொமான்டிக் சீரியல் ஆன கண்ணான கண்ணே 5-ஆம் இடத்தையும் பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து எதிர்நீச்சல், அபியும் நானும், சந்திரலேகா, பாண்டவர் இல்லம், சித்தி 2 போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.