ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அஸ்திரத்தை பயன்படுத்தியும் அடி வாங்கிய விஜய் டிவி.. டிஆர்பி-யில் தும்சம் செய்யும் சன் டிவி!

கடந்த வாரம் முழுவதும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டு சீரியல்களையும் இணைத்து மகா சங்கமம் என்ற பெயரில் தங்களது டிஆர்பியை எகிற விட விஜய் டிவி பக்கா பிளான் போட்டு செயல்படுத்தியது. அந்த மகாசங்கமத்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாண்டிய சுவாரசியமும், எதிர்பாராத திருப்பமும் காட்டப்பட்டது.

இருப்பினும் டிஆர்பி-யில் சன் டிவியின் கயல் சீரியல் உடன் போட்டி போட முடியாமல் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட விறுவிறுப்பான தருணம் ஒளிபரப்பானதால், அந்த சீரியல் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் டாப் இடத்தை பிடித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது இடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியல்களின் மகா சங்கமம் பெற்றுள்ளது. மூன்றாவது இடம் ராஜா ராணி2 சீரியலுக்கும், நான்காவது இடம் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கும், ஐந்தாமிடம் மௌன ராகத்திற்கும் கிடைத்திருக்கிறது.

இதை போன்று சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் வழக்கம்போல் கயல் சீரியல் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தை சுந்தரி சீரியல் பிடித்திருக்கிறது. முழுமையாக மாறிய சுந்தரியை சின்னத்திரை ரசிகர்கள் இவ்வளவு நாள் எதிர்பார்த்து காத்திருந்ததால், இந்த சீரியல் முன்பைவிட விறுவிறுப்பாக செல்கிறது.

இதைத்தொடர்ந்து மூன்றாவது இடம் அண்ணன்-தங்கை பாசத்தை வெளிக்காட்டும் வானத்தைப்போல சீரியலும், நான்காவது இடம் கண்ணான கண்ணே சீரியலும் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடம் ரொமான்டிக் மற்றும் அதிரடி சீரியலாக ரசிகர்களால் பார்க்கப்படும் ரோஜா சீரியல் பெற்றிருக்கிறது.

இவ்வாறு எந்த சீரியலுக்கு எந்த இடம் கிடைத்திருக்கிறது என்பதை ஆர்வத்துடன் அறிந்து கொள்வதும், எந்த சீரியலை ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல் என்பதை தெரிந்து கொள்ளவும் விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர்.

Trending News