செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

டிஆர்பி ரேட்டிங்கில் கடும் போட்டி போடும் சன் டிவி மற்றும் விஜய் டிவி சேனல்கள் சின்னத்திரை ரசிகர்களை கவரும் நோக்கத்தில் பல யுத்திகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இவர்கள், ஒருவர் மற்றொருவரின் டிஆர்பியை கொடுப்பதற்காகவும் ஸ்கெட்ச் போட்டு பிளான் பண்ணுகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியின் அஸ்திரமாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் வாரங்களில் துவங்கப் போகிறது. இதற்கான புரோமோ வரிசையாக வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டுக் கொண்டிருக்கிறது.

Also Read: தலைகணத்தில் இருக்கும் விஜய்.. எங்களுக்கு தளபதியே தேவையில்லை என்று முடிவெடுத்த ரசிகர்கள்.!

இந்த சூழலில் சன் டிவி, விஜய் டிவியின் டிஆர்பியை கெடுப்பதற்காகவே, பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கும் அதே நாளில், தளபதி விஜய்-நயன்தாரா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிகில் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யப் போகின்றனர்.

வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது பிகில். ஆகையால் விஜய்யின் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற கண்ணோட்டத்தில் இருக்கும் ரசிகர்களை, பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கவிடாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் திகில் படத்தை பார்க்க வைக்க திட்டம் போட்டிருக்கின்றனர்.

Also Read: களை கட்டும் பிக் பாஸ் சீசன் 6.. உறுதியான 6 போட்டியாளர்கள்

இதேவேலையை தான் சன்டிவி பலமுறை பார்த்திருக்கிறது. முன்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளில் பிகில் படத்தை சன் டிவி ஒளிபரப்பு செய்து பிக்பாஸ் டிஆர்பி ரேட்டிங்கை கெடுத்தது. அதே போன்று தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கோலாகலமாக லான்ச் செய்யப் போகும் விஜய் டிவியை மீண்டும் சீண்டிப் பார்க்கிறது சன் டிவி.

அதுமட்டுமின்றி விஜய் டிவியின் பக்கா என்டர்ட்டன்ட்மெண்ட் நிகழ்ச்சியாக ரசிகர்களை ரசிக்க வைத்த குக் வித் கோமாளி சீசன் 2 கிராண்ட் பினாலே-வின்போது தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை ஒளிபரப்பு சின்னத்திரை ரசிகர்களை தங்கள் வசம் ஈர்த்தது. ஆகையால் தொடர்ந்து இதே வேலையை பார்க்கும் சன் டிவி பிகில் படத்தின் மூலம் மீண்டும் டிஆர்பி-யில் மாஸ் காட்டுமா! என பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

Trending News