சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

லாரன்ஸுக்கு டஃப் கொடுக்கும் சுந்தர்.சி.. கூட்டு சேர்ந்த அடுத்த சிவகார்த்திகேயன்

Sundar C Give Tough To Lawrence: லாரன்ஸுக்கு கடந்த வருடம் சந்திரமுகி 2 பெரும் பின்னடைவாக அமைந்த நிலையில் ஜிகர்தண்டா 2 ஓரளவுக்கு கை கொடுத்தது. அதை அடுத்து தற்போது அவர் அதிகாரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சுந்தர் சி கைவசம் அரண்மனை 4, ஒன் டூ ஒன், வல்லான் ஆகிய படங்கள் இருக்கிறது.

இது போதாது என்று தற்போது அவர் கலகலப்பு 3 எடுப்பதற்கும் தயாராகி இருக்கிறார். இப்படித்தான் அரண்மனை முதல் பாகம் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தது. தற்போது கூட நான்காம் பாகம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் கதை ஒரே மாதிரி இருந்ததால் க்ரிஞ்ச் என ஆடியன்ஸ் கிண்டல் அடித்தனர்.

மேலும் கலகலப்பு படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார். ஆனால் முதல் பட அளவுக்கு இரண்டாம் பாகம் இல்லை. இருப்பினும் தற்போது மூன்றாம் பாகத்தை அவர் துணிந்து எடுக்க இருக்கிறார்.

Also read: சுந்தர்.சி-யை கொண்டாட வைத்த 5 படங்கள்.. கார்த்திக்கை கதறவிட்டு கொடுமைப்படுத்திய உள்ளத்தை அள்ளித்தா

இதில் அடுத்த சிவகார்த்திகேயன் என்று புகழப்படும் கவின் நாயகனாக நடிக்க உள்ளாராம். ஏற்கனவே இவருடைய கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கிறது. சமீபத்தில் கூட வெற்றிமாறன் தயாரிப்பில் நடிப்பதற்கு இவர் கமிட் ஆகி இருக்கிறார். அப்படி இருக்கும்போது சுந்தர் சி படத்தில் நடிப்பதற்கும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

ஆனால் நல்ல வாய்ப்பை விடக்கூடாது என கவின் இதற்கு ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுக்க சம்மதித்திருக்கிறாராம். இதன் மூலம் சுந்தர்.சி பேய்பட சீரிஸ் எடுத்து வரும் லாரன்சுக்கே டஃப் கொடுத்து இருக்கிறார். அரண்மனை, கலகலப்பு என சீரிஸ் படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

அதில் கலகலப்பு 3 எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை. அதனாலேயே ரசிகர்கள் இதை கேள்விப்பட்டு இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட் என குமுறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இந்த செய்தி உண்மை இல்லை என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்தால் தான் தெரியவரும்.

Also read: நிற்க நேரமில்லாமல் வரிசை கட்டும் 4 படங்கள்.. சிவகார்த்திகேயன் இடத்தை பிடிக்க தயாராகும் கவின்

Trending News