Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

நயன்தாராவிற்கெல்லாம் வெயிட் பண்ண முடியாது, கடும் கோபத்தில் சுந்தர் சி.. மத்தளம் போல் அடி வாங்கும் தயாரிப்பாளர்

நயன்தாராவிற்கெல்லாம் வெயிட் பண்ண முடியாது, கடும் கோபத்தில் சுந்தர் சி.. மத்தளம் போல் அடி வாங்கும் தயாரிப்பாளர்

சுந்தர் சியை சுற்றி சுற்றி பல தயாரிப்பாளர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள், எல்லாத்துக்கும் மதகஜராஜா கொடுத்த சூப்பர் ஹிட் தான் காரணம். இப்பொழுது அவரை வைத்து சந்தானத்தையும் வளைத்து போட பல பேர் போட்டி போட்டு வருகிறார்கள். மதகஜராஜா […]

சுந்தர் சியை சுற்றி சுற்றி பல தயாரிப்பாளர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள், எல்லாத்துக்கும் மதகஜராஜா கொடுத்த சூப்பர் ஹிட் தான் காரணம். இப்பொழுது அவரை வைத்து சந்தானத்தையும் வளைத்து போட பல பேர் போட்டி போட்டு வருகிறார்கள்.

மதகஜராஜா கூட்டணியில் மற்றொரு படத்தையும் பண்ணுவதற்கு பணத்தோடு தயாரிப்பாளர்கள் சுந்தர் சியை அணுகி வருகிறார்கள். எப்பொழுதுமே அவருக்கு ஆஸ்தான தயாரிப்பு நிறுவனம் பென்ஸ் மீடியா தான். அவர்களுக்காக ஒரு படம் பண்ணுவதாக பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.

இதை கேள்விப்பட்ட வேல்ஸ் நிறுவனத்தின் ஓனர் ஐசரி கணேஷ் சுந்தர் சி இடம் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளார். ஏற்கனவே இந்த நிறுவனத்துக்காக மூக்குத்தி அம்மன் 2 படம் எடுப்பதாக அக்ரிமெண்ட் போட்டுள்ளார் சுந்தர்சி.

முதலில் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை முடித்துக் கொடுத்து அடுத்த படத்திற்கு செல்லுங்கள் என ஐசரி கணேஷ் கூறியுள்ளார். அதற்கு சுந்தர் சி நயன்தாரா டேட் வாங்கிய பின் வாருங்கள். அவருக்காக காத்துக் கொண்டே இருக்க முடியாது என அனுப்பி விட்டாராம்.

ஏற்கனவே மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் வேல்ஸ் நிறுவனத்துடன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமும் சேர்ந்து தான் தயாரிப்பதாக இருந்தது. அப்போதும் கூட நயன்தாரா கால் சீட் கொடுக்க முன்வரவில்லை. சுந்தர் சியும் காத்திருந்து நாட்களை வீரியம் செய்ததுதான் மிச்சம்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.