மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்க்க வந்த பத்திரிகையாளர்களை நேரில் வரவேற்ற இயக்குநர் சுந்தர் சி, திரையரங்கில் வழக்கத்தைவிட சற்று பதட்டமாகவே காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அதற்கு முக்கிய காரணம் இந்தப் படத்தின் மீதான அவருடைய எதிர்பார்ப்புதான். கடந்த சில ஆண்டுகளில் அவர் இயக்கிய சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மதகஜராஜா படம் எதிர்பாராத விதமாக வெற்றி பெற்றது.
இதனால் தற்போது வெளியாக இருக்கும் மூக்குத்தி அம்மன் 2 மீது சுந்தர் சி அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றால், சுந்தர் சியின் இயக்குநர் பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் மீண்டும் எழலாம்.
ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த சுந்தர் சியின் பழைய வெற்றி காலம் முடிந்துவிட்டதா என்ற கேள்வியும் எழ வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டது தொடர்பாகவும் ஏற்கனவே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூக்குத்தி அம்மன் 2-வின் வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மூக்குத்தி அம்மன் 2 சுந்தர் சிக்கு மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்குமா? அல்லது அவரது அடுத்த படத்திற்கான பாதையை இன்னும் கடினமாக்குமா என்பதுபத்திரிகையாளர் விமர்சனத்தை பொறுத்துதான். அதுக்குதான் இந்தன் பதட்டம்.




