
Sun TV : சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான சுந்தரி தொடரில் கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் ஜிஷ்ணு மேனன். நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த தொடர் சமீபத்தில் தான் நிறைவு பெற்றது.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஜிஷ்ணு மலையாள தொடர்களில் நடித்துள்ளார். அதன் பிறகு சன் டிவியில் வாய்ப்பு கிடைக்க சுந்தரி சீரியலை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
நெகட்டிவ் கதாபாத்திரம் என்றாலும் தனது நடிப்பு திறமையால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்போது அதே சன் டிவியில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகை ரேஷ்மா முரளிதரன் நடிக்கிறார்.
சுந்தரி சீரியல் ஜிஷ்ணுவின் நிச்சயதார்த்த புகைப்படம்

இப்போது புது சீரியலில் கமிட்டான கையோடு ஜிஷ்ணுக்கு நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது. மேக்கப் ஆர்டிஸ்ட் ஆன அபியாதிராவை மணக்க இருக்கிறார் ஜிஷ்ணு.
அபியாதிரா சுந்தரி சீரியலில் ஜிஷ்ணுவுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி இருக்கிறார். இதன் மூலம் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்ட அது காதலாக மாறியிருக்கிறது.
இப்போது விரைவில் திருமண பந்தத்திலும் இணைய இருக்கின்றனர். ஜிஷ்ணு, அபியாதிராவுக்கு மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அதோடு விரைவில் திருமண தேதியையும் இந்த ஜோடி அறிவிக்க இருக்கிறது.