திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஜோதிகா தவறவிட்ட மெகாஹிட் படம்.. அஜித், அமிதாப்பட்சன் சேரமுடியாமல் போன துரதிர்ஷ்டம்

கமல், ரஜினியுடன் சேர்ந்து நடித்த ஜோதிகா பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். ஜோதிகா-அஜித்-அமிதாப் பச்சன் கூட்டணியில் தமிழில் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் உருவாக இருந்து இருக்கிறது.

ஜோதிகா தெலுங்கு, மலையாளம், கன்னடம் , ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் அத்தனை மொழிகளிலும் முக்கியமான கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்தார். ஜோதிகா அஜித்துடன் சேர்ந்து வாலி, முகவரி, பூவெல்லாம் உன் வாசம் என மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறர்.

அஜித் காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னை தேடி என்று காதல் கதைகளில் நடித்து கொண்டிருந்த போது அவர் நெகடிவ் ரோலில் நடித்த படம் தான் வாலி. அதில் பெரிதாக ஆக்சன் காட்சிகள் ஏதும் இல்லை என்றாலும், வில்லத்தனத்தை சிறப்பாக காட்டியிருப்பார்.

1999 ஆம் ஆண்டு ஆனந்த பூங்காற்றே திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு வந்த திரைப்படம் தான், அமர்க்களம். அமர்க்களம் இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன், நாசர், அம்பிகா,வினு சக்கரவர்த்தி, வையாபுரி நடிப்பில் வெளியானது.

அஜித் முதன் முதலாக நடித்த ஆக்சன் திரைப்படத்திலேயே மிகப்பெரிய வெற்றி கண்டார். அமர்க்களம் திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வசூலை எட்டியது. இந்த படம் ரிலீஸின் போது அஜித்திற்கு ஒரே நாளில் 25,000 ரசிகர் மன்றம் உருவானதாக இயக்குனர் சரண் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்த படத்தில் ஷாலினி கேரக்டரில் முதன்முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா, அப்போது அவர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்ததால் அவரால் அமர்க்களம் படத்தில் நடிக்க முடியாமல் போனது. மேலும் கதாநாயகியின் அப்பா, துளசி தாஸ் கேரக்டரில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சி செய்தனர் அதுவும் சில காரணங்களால் முடியாமல் போனது. அந்த கேரக்டரில் ரகுவரன் நடித்தார்.

பூவெல்லாம் கேட்டு பார் திரைப்படத்தில் ஜோடியாக இணைந்த சூர்யா-ஜோதிகா, அமர்க்களம் படத்தில் நடித்த அஜித்-ஷாலினி பின்னாளில் காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடதக்கது.

Trending News