சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

டிஆர்பி படுத்து விட்டதால் இழுத்து மூடும் மற்றுமொரு விஜய் டிவி சீரியல்.. 409 எபிசோடுக்கு எண்டு கார்டு

ரசிகர்கள் மத்தியில் தற்போது திரைப்படங்களைக் காட்டிலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் முக்கிய பொழுது போக்காக உள்ளது. தினமும் அந்த எபிசோடை பார்த்த முடித்தால்தான் அவர்களுக்கு தூக்கமே வருகிறது. அவ்வாறு சீரியல்கள் ரசிகர்களின் வாழ்க்கையோடு ஒன்றாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர் நிறைவுபகுதியை எட்டியுள்ளது. விஜய் டிவியில் மதிய நேரம் ஒளிபரப்பாகி வரும் தொடர் வேலைக்காரன்.

இந்ததொடர் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் வேலைக்காரன் தொடரின் கதை ரஜினி நடித்த முத்து படத்தின் கதை என நெட்டிசன்கள் கலாய்த்த வந்தனர். ஆனாலும் இத்தொடர் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.

வேலைக்காரன் தொடரில் வேலனாக சபரியும், வள்ளியாக கோமதி பிரியாவும் நடித்திருந்தனர். இத்தொடர் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதில் வேலன் மற்றும் வள்ளி திருமணத்தின் போது டிஆர்பியில் டஃப் ரேட்டிங்கில் இருந்தது. ஆனால் அதன்பிறகு டிஆர்பி ரேட்டிங்கில் படுத்துவிட்டது. இதனால் 409 எபிசோடுகள் கடந்த இத்தொடருக்கு இயக்குனர் எண்டு கார்டு போட்டுள்ளார்.

இந்நிலையில் இத்தொடரில் கடைசி நாள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சபரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் இதே குழுவுடன் மீண்டும் ஒரு புதிய தொடரில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இத்தொடர் ஒளிபரப்பான மதியம் 2 மணிக்கு செல்லம்மாள் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இத்தொடர் அம்மா, மகளுக்கு இடையே ஆன பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Trending News