வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நாங்க வளர்வது உன்னால பொறுத்துக்க முடியலன்னா போய் சாவுடா.. சிவகார்த்திகேயனுக்காக கர்ஜிக்கும் ரஜினி!

Super star Rajini supports sivakarthikeyan in thalaivar 171: புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை! வெற்றி பெற்ற மனிதர் யாரும் நிலைத்து நிற்பதில்லை! நிலைத்து நிற்கும் மனிதரை சினிமா நிம்மதியாக வாழ விடுவதில்லை.

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைவது என்பது கடினம். அதிலும்  பல எட்டப்பன்கள் நிறைந்திருக்கும் உலகில் தனக்குரிய தக்க தனக்குரிய இடத்தை தக்க வைப்பதற்கு கட்டபொம்மனை விட அதிகமாக போராட வேண்டி இருக்கும். அதற்கு ரஜினியும் விதிவிலக்கு அல்ல.சிவகார்த்திகேயனும் விதிவிலக்கு அல்ல.

சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்த முயற்சியால் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என  மடு மலையான கதை நாம் அனைவரும் அறிந்ததே.  இவரின் வளர்ச்சி பிடிக்காத பலரும்  பலவகையிலும் இவருக்கு குடைச்சல் கொடுத்துள்ளனர்.  ஒரு கட்டத்தில் மேடை ஏறி கதறினார் சிவகார்த்திகேயன். விடுவார்களா வஞ்சகர்கள்.

Also read: சூர்யாவின் நடிப்பை பார்க்க மாறுவேடத்தில் சென்ற ரஜினி.. அப்படி என்ன சூப்பர் ஹிட் படம் அது?

கொடிய நோயிலிருந்து தப்பியவர்கள் உண்டு வஞ்சகத்தில் இருந்து தப்பியவர்கள்  எவரும் இருந்தது கிடையாது.  இதே போன்று சூழ்நிலையை அனுபவித்து அறிந்த ரஜினி அவர்கள் வளந்து வரும் கலைஞர்களுக்கு பிரச்னை ஏற்படும் போது ஆதரவு கரம் நீட்டி தன் தலைமையை நிரூபித்து உள்ளார்.

அஜித்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது அவரை பிரச்சனையிலிருந்து தப்ப யோசனை  கூறிய போதிலும், அவரின் யோசனையை கேட்டு அவமானப்படுத்தப்பட்ட போது அஜித்திற்கு ஆறுதல் கூறிய போதும்,அதே போன்று சிவகார்த்திகேயனின் நற்பெயருக்கு களங்கம் வந்தபோது இவரை அரவணைத்துக் தலைவர் 171இல் வாய்ப்பு கொடுத்த போதும் தலைவனாக அல்ல தந்தையாகவே உயர்ந்தார் நம் சூப்பர் ஸ்டார்.

தலைவர் கபாலியில் சொன்ன மாதிரி “எவனாவது முன்னுக்கு வந்துட்டா உங்களால பொறுத்துக்க முடியாதுல்ல, முன்னுக்கு வருவது தான் உங்களுக்கு பிரச்சனை என்றால் நான் முன்னுக்கு வருவேண்டா! உன்னால பொறுத்துக்க முடியவில்லை என்றால் சாவுடா! என்று கர்ஜித்திருப்பார்.

Also read: சிவகார்த்திகேயன் வளர்ச்சியை கெடுக்கும் 6 பேர்.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கும் எதிரிகள்

Trending News