திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சோலோவாக களம் காண தடுமாறும் சூப்பர் ஸ்டார்.. பாக்ஸ் ஆபிஸ் ஏற்படுத்திய பதற்றம்

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து இந்திய சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்றோர்கள் நடிக்கவிருக்கின்றனர். தளபதி திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் இது போன்று மெகா ஸ்டார்களுடன் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்.

ரஜினிகாந்த் வெள்ளித் திரையில் வந்தால் மட்டுமே போதும் தியேட்டரில் அனல் பறக்கும் என ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்குமே தெரியும். ஆனால் இனிமேல் அவர் நடிக்கும் படங்களில் அவரை மட்டும் சோலோவாக பார்க்க முடியாது என தெரிகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து தன்னுடைய படங்களை எப்படி கொண்டு வந்து, வெற்றி பெற வேண்டும் என மிகப் பெரிய திட்டம் போட்டு இருக்கிறார்.

Also Read:முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 5 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

என்னதான் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் தான் மாஸ் என்று இருந்தாலும் சில வருடங்களாக அவருடைய படங்கள் வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வசூல் அளவில் பார்த்துக் கொண்டால் தளபதி விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். இதனால் ரஜினி இனிவரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். இனிமேல் தான் தனியாக நடித்தால் வசூலில் வெற்றி பெற முடியாது என ரஜினிக்கு சந்தேகம் வந்திருக்கிறது.

எனவே இனிமேல் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு முக்கிய ஹீரோவை தன்னுடன் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார் ரஜினி. இதை உறுதிப்படுத்தும் விதமாக தலைவர் 170 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அமிதாப் தமிழில் தலைவர் 170 படத்தை தேர்வு செய்வாரா அல்லது ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்ட உயர்ந்த மனிதன் படத்தை தேர்வு செய்வாரா என்பது சரியாக தெரியவில்லை.

Also Read:ரஜினியின் டயலாக்கை அட்ட காப்பி அடித்த தளபதி.. மாணவர்களின் முன்னிலையில் உடைந்த சஸ்பென்ஸ்

அதேபோன்று இனி ரஜினி நடிக்கும் படங்களில் எந்த ஹீரோ நடிக்க ஒப்புக் கொள்கிறாரோ அவரை வைத்து படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் அதிரடி முடிவு. ஏற்கனவே பேட்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரஜினியுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற முன்னணி ஹீரோக்களை தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பதன் மூலம் அவர்களுடைய ரசிகர்களின் ஆதரவும் படத்திற்கு கிடைக்கும் என்பதுதான் ரஜினியின் வியூகம்.

ரஜினி, லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் படத்தில் இதைப் பற்றி யோசிக்க எந்த கவலையும் இல்லை. லோகேஷ் படம் என்றாலே அது மல்டி ஸ்டார்கள் கூட்டணியில் தான் வெளியாகும். தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்திருந்த ரஜினிகாந்த் தற்பொழுது தன் படங்களில் சோலோவாக நடிக்க யோசித்து, இன்னொரு நடிகர்கள் மற்றும் நடிகைகளை நம்புவது என்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக தான் இருக்கிறது.

Also Read:ரஜினியை செருப்பால் அடிப்பேன் என கூறிய இயக்குனர்.. நாகேஷை காட்டி திருத்திய சம்பவம்

Trending News