வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வீடு தேடி வந்த நடிகை.. வாரி கொடுத்து காப்பாற்றிய ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று தலைமுறைகளாக கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். 70 வயதினை தாண்டியும் இன்றும் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் ரஜினியின் படத்திற்கு மட்டுமே தயாரிப்பாளர்கள் சற்றும் யோசிக்காமல் 100 கோடிக்கு மேல் பட்ஜெட் ஒதுக்குகிறார்கள். ஆனால் ரஜினி அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினிகாந்த் இந்த இடத்திற்கு வர அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் ரொம்பவே அதிகம். அதனால் தான் அவரால் பிறரின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ரஜினி இந்த இடத்திற்கு வந்தாலும் எப்போதும் தன்னுடைய பழைய வாழ்க்கையை மறந்ததில்லை. மேலும் அப்போது அவருடன் இருந்த பலருக்கும் உதவி செய்து வருகிறார். அப்படி தன்னுடன் நடித்த நடிகை ஒருவருக்கு இவர் செய்த உதவியை பற்றி இப்போது அந்த நடிகை பேசியிருக்கிறார்.

Also Read: பாபா ரீ-ரிலிஸில் மாற்றப்பட்ட முக்கியமான காட்சிகள்.. கிளைமாக்ஸில் வைத்த அதிரடி ட்விஸ்ட்

70, 80 களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரியில் டாப் நடிகையாக இருந்தவர் தான் ரமா பிரபா. இவர் எம். ஜி. ஆர், சிவாஜி, நாகேஷ், கமல், ரஜினி போன்ற டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அப்படி இவர் ரஜினியுடன் நடித்த திரைப்படம் தான் நான் அடிமை இல்லை. இவர் வாழ்க்கையில் தன்னுடைய சொத்துக்கள் பலவற்றையும் இழந்து கஷ்டப்படும் சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று தன்னுடைய நிலைமையை எடுத்துக் கூறி பண உதவி கேட்டுள்ளார்.

அப்போது சூப்பர் ஸ்டார் கொஞ்சமும் யோசிக்காமல் தன்னிடம் இருந்த 40,000 ரூபாயை நடிகை ரமா பிரபாவிற்கு கொடுத்துள்ளார். அந்த காலகட்டத்தில் 40,000 தொகை என்பது மிகப்பெரியது எனவும், அதை வைத்து தன்னுடைய பல கஷ்டங்களை தீர்த்து கொண்டதாகவும் கூறியிருக்கிறார். மேலும் சூப்பர் ஸ்டார் எப்போதும் எளிமையாகவும், அடக்கமாகவும் இருப்பதாகவும், தன்னை தேடி உதவி என்று வருபவர்களை வெறும் கையோடு அனுப்புவதில்லை என்றும் ரமா சொல்லியிருக்கிறார்.

Also Read: மாண்டஸ் புயலை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்.. 20 வருடங்களுக்கு பிறகும் வரலாறு படைக்குமா பாபா ரீ ரிலீஸ்?

ரமா பிரபா சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், பட்டணத்தில் பூதம், வசந்த மாளிகை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த காலத்தில் ஹீரோயின்களுக்கு இணையாக சம்பாதித்தவர். 1980 ல் இருந்து சில வருடங்களாக நடிகர் சரத்பாபுவுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் சரத்பாபுவை விட்டு பிரிந்ததோடு தன்னுடைய சொத்துக்களையும் இழந்தார்.

இப்படியிருக்க சில வருடங்களுக்கு முன் மீடியாவிடம் பேசிய ரமா பிரபா தான் சரத் பாபுவை நம்பி மோசம் போய்விட்டதாகவும், அவர் தன்னுடைய சொத்துக்களையும், தனக்கென இருந்த வீட்டையும் அபகரித்து கொண்டதாகவும் பேசியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த சரத்பாபு ரமா பிரபா தன்னுடைய முன்னாள் மனைவி இல்லையென்றும், அந்த உறவுக்கு பெயரில்லை என்றும் கூறியிருந்தார்.

Also Read: ரஜினி படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்.. எதிர்பாராத பரிசு கொடுத்து வாழ வைத்த சூப்பர் ஸ்டார்

Trending News