வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வணங்கான் கைவிட்டாலும் சூர்யா அடுத்தடுத்து கமிட்டான 5 படங்கள்.. சமரசமாக முடிந்த அருவா மோதல்

நடிப்பு அரக்கனாக மாறிக்கொண்டிருக்கும் சூர்யா, இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தை கைவிட்ட பிறகு அடுத்தடுத்து வரிசையாக 5 படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அதிலும் பல மாதங்களாக மோதிக் கொண்டிருந்த அருவா மோதல் தற்போது முடிவை எட்டியுள்ளது.

சூர்யா 42: இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்த படம் 3டி முறையில் உருவாகும் சரித்திர திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சூர்யா அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என 5 கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

வாடிவாசல்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டது. நடிகர் தனுஷை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த வெற்றிமாறன் முதன்முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

Also Read: அடுத்தவன் காசுனா மட்டும் அள்ளிக் கொடுக்கிறது.. இப்போ தானே தெரியுது பாலாவின் சுயரூபம்

இயக்குனர் ரவிக்குமார்-சூர்யா: அயலாம் படத்தை இன்று நேற்று நாளை அயலான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் அடுத்ததாக ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக சூர்யாவை வைத்து அறிவியல் கதைய அம்சம் நிறைந்த படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஏழாம் அறிவு, 24 போன்ற சயின்ஸ் பிக்சன் பிலிம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த படமும் அந்த வரிசையில் இடம்பெறவுள்ளது.

Also Read: தன்னடக்கம், தைரியம், பதட்டம் இல்லை, வந்து பாருங்கள்.. மேடையிலேயே 4 அப்டேட்டையும் போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் ஹரி-சூர்யா: கமர்சியல் படங்களை இயக்கியதன் மூலம் தொடர் வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருக்கும் ஹரி இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் ஆறு, வேல், சிங்கம் 1, 2, 3 என தொடர் வெற்றிகளை கொடுத்தது அதன் பிறகு அருவா என்ற படம் உருவாகவதற்கான சாத்திய கூறி இருந்த நிலையில், அந்தப் படம் டிராப்பான பிறகு தற்போது சமரசம் ஆகி புதிதாக ஒரு படத்தில் இவர்களது கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-சூர்யா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த மூலம் கோலிவுட்டில் தனக்கிருந்த இமேஜை வேற லெவலில் கொண்டு சென்று இருக்கிறார். மேலும் லோகேஷ் கனகராஜ், லோகேஷ் யூனிவர்ஸ் பார்மட்டில் படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து ஒரு கதை தயார் செய்து இருக்கிறார். அந்தப் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

Also Read: டாப் 10 சயின்டிஃபிக் மூவிஸ்.. சீனர்களையும் வியக்க வைத்த போதிதர்மர்

இவ்வாறு 5 ப்ராஜெக்ட் கையில் வைத்திருக்கும், இதற்கிடையில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கெஸ்ட் ரோல், லோகேஷ் கனகராராஜின் கைதி 2-வில் கெஸ்ட் ரோல் நடிப்பதாகவும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.

Trending News