Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

சூர்யாவுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. அரசியலுக்கு அடி போடுகிறாரா!

சூர்யாவுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. அரசியலுக்கு அடி போடுகிறாரா!

சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானாலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சூர்யாவிற்கு திரையரங்கில் வெளியாகும் படங்கள் […]

சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியானாலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறாமல் தோல்வி அடைந்தது அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சூர்யாவிற்கு திரையரங்கில் வெளியாகும் படங்கள் அனைத்துமே தோல்வியைக் கொடுத்து வருவதாக பலரும் கூறி வந்தனர். இதன் மூலம் சூர்யா ஒரு  OTT நாயகன் என ஒரு பக்கம் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

ஆனால் திரைத் துறையில் ஒருபுறம் அசத்தி வரும் சூர்யா பலருக்கும் பல்வேறு உதவிகள் செய்வதன் மூலம் ஒரு நல்ல மனிதராக ஜெயித்து வருகிறார். சூர்யா சமூக சேவைகள் செய்வதில் மிகவும் அக்கறை உள்ளவர். அவர் பல வருடங்களாக ஏழை மாணவர்கள் பலன் பெறும் வகையில் அகரம் என்ற கல்வி நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

இதே போல் சமீபகாலமாக விஜய் சேதுபதி பல சமூக சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். அந்த வரிசையில் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வாங்கித் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக இதுவரை ஒரு லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

இதன் நோக்கம் திரைத்துறையில் இருக்கும் பலரும் அரசியலில் கால்பதிக்க அடித்தளம் போட்டு விட்டதாக பலர் கூறி வருகின்றனர். தற்போது சூர்யா ஏழை மாணவர்களுக்கு பல்வேறு உதவி செய்து வருவதால் விரைவில் சூர்யாவும் அரசியல் களமிறங்கி மக்களுக்கு நல்லது செய்வார் என பலரும் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக சூர்யாவின் பேச்சுக்களும் நேரடியாக அரசியல்வாதிகளை தாக்கிய தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு நீட் தேர்வு பற்றி அவர் பேசிய விஷயம் அனைவருக்கும் தெரியும், இந்த உலகில் மாற்றங்கள் நிகழ வேண்டுமென்றால் அது நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் அரசியலுக்கு வருவதை ஒருமுறை நாசுக்காக கூறியிருந்தார்.

தற்போது விஜய் சேதுபதியும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அதனால் இவருக்கும் தற்போது அரசியல் ஆசை வந்துவிட்டது என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். விஜய் சேதுபதியும் சூர்யாவை போல் எந்த ஒரு இடத்திலும் பயப்படாமல் தனக்கு தோன்றியதை வெளிப்படையாகப் பேசுவார். சமீபகாலமாக விஜய் சேதுபதியும் பல அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை பேசியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் ஒரு நடிகர் நல்லது செய்து விட்டால் உடனே அவர்களுக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது எனக் கூறுவது முட்டாள்தனமான விஷயம் இவர்கள் இருவருக்கும் அரசியல் ஆசை இருக்கிறதா என்பது தெரியவில்லை ஆனால் இவர்கள் உதவி செய்வதன் மூலம் பலருக்கும் நன்மையாக இருக்கிறது எனக் கூறி வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.