தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவிற்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் அவர்,தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ‘சீன்’படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார்.இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து,நடிகர் சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
அந்த வீடியோவில் பேசிய சூர்யா,தனது அன்பான ரசிகர்கள்,தம்பி,தங்கைகள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் முதலில் மரியாதையுடன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.‘சீன்’படத்தைத் தியேட்டர்களில் பார்த்து ரசித்ததோடு மட்டுமல்லாமல்,படத்தைப் பற்றிய ரிவியூக்களை சேர் செய்து,ஒவ்வொரு சீனையும் அலசி ஆராய்ந்து,பல்வேறு கோணங்களில் விவாதித்து,படத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு கொண்டாடிய ரசிகர்களின் அன்புக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறியுள்ளார்.
மேலும்,பொதுவாக ஒரு படம் வெற்றியடையும்போது அதில் பணியாற்றிய நடிகர்கள்,இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் அதிகம் மகிழ்ச்சியடைவார்கள்.ஆனால்,இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழுவினரை விட ரசிகர்களே அதிகமாகக் கொண்டாடியிருப்பதாக சூர்யா குறிப்பிட்டுள்ளார்.இந்த அன்பிற்கு வார்த்தைகளால் எப்படித் நன்றி சொல்வது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனுடன் தியேட்டர் உரிமையாளர்கள்,மீடியா,பத்திரிகையாளர்கள்,சினிமா விமர்சகர்கள்,இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என அனைவருக்கும் படக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2026ஆம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பான படத்தை வழங்குவதாக சூர்யா தனது பதிவில் உறுதியளித்துள்ளார்.




