வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஊர் வாய்க்கு பயந்து வந்த சிவகுமார், கார்த்தி.. கேப்டன் சமாதியில் தேம்பித் தேம்பி அழுத சூர்யா

Suriya-Vijayakanth: விஜயகாந்த் மறைவிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் அவருடைய குடும்பத்தினர் மட்டுமல்லாமல் தமிழக மக்களும் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அதனாலேயே இப்போது ஒட்டு மொத்த மக்களும் அவரை நல்லடக்கம் செய்த இடத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

அதேபோல் அவருடைய இறப்பிற்கு வராத நடிகர்களும் தற்போது வந்து கொண்டிருக்கின்றனர். அதில் நேற்று சிவக்குமார், கார்த்தி ஆகியோர் வந்து விஜயகாந்துக்கு தங்களுடைய மரியாதையை செலுத்தினார்கள். அப்போது கார்த்தி அவருடைய இறப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

கேப்டன் மாதிரி ஒருத்தரை பார்க்கவே முடியாது. நான் எப்போதும் அவரை மிஸ் செய்வேன் என்று குரல் தழுதழுக்க பேசி இருந்தார். ஆனால் உண்மையில் அதை பார்க்கும் போது அது நடிப்பா? உண்மையா? என்ற கேள்விதான் அனைவருக்கும் இருந்தது.

Also read: நீங்க எல்லாம் வரலைன்னு யாரு அழுதா.? விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார், கார்த்தி

ஏனென்றால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சென்ற நடிகர்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வறுத்தெடுத்து வந்தனர். அதில் நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த கார்த்தியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அதனாலேயே அவர் ஊர் வாய்க்கு பயந்து கேப்டன் சமாதிக்கு வந்தது போல் இருந்தது.

ஏதோ கடமைக்கு வந்து கண்ணீர் விட்டு நாலு வார்த்தை பேசி சென்றது போல் தான் பார்ப்பவர்களுக்கு தெரிந்தது. ஆனால் சூர்யா மனதார கேப்டன் சமாதியின் முன்பு நின்று அழுதது உருக்கமாக இருந்தது. அதிலும் அவருக்கான மாலையை தன் கையாலே எடுத்து வந்து சமாதியில் வைத்ததோடு குழந்தை போல தேம்பித் தேம்பி அழுதார்.

அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது. மேலும் அதை பார்த்த ரசிகர்கள் இதுதான் உண்மையான கண்ணீர் என கூறி வருகின்றனர். ஆனால் அவர் கேப்டன் இறப்புக்கு வரவில்லை என்ற குறை இப்போதும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.

Also read: சூர்யாவை மிரள வைத்த ரசிகரின் போஸ்டர்.. ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா

Trending News