Suriya-Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் முன்னேற்றத்தை நோக்கி நகர ஆரம்பித்த நாளிலிருந்தே ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வந்தார். மேடையிலேயே அவர் கண்கலங்கி பேசிய சம்பவமும் நடந்திருக்கிறது. ஆனால் அதை எல்லாம் ஈசியாக சமாளித்து வந்தவருக்கு ஒரு தயாரிப்பாளர் பட்ட நாமம் போட பார்த்த கதையும் உண்டு.
அதாவது நயன்தாராவுடன் இணைந்து இவர் நடித்த மிஸ்டர் லோக்கல் என்ற படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை. அதனாலேயே தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய நான்கு கோடி சம்பள பாக்கி கொடுக்காமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. அதில் சிவகார்த்திகேயன் தனக்கு பேசப்பட்ட 15 கோடி சம்பளத்தில் 11 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தார். அதை அடுத்து ஞானவேல் ராஜா இந்த படக்கதையே எனக்கு பிடிக்கவில்லை. இதனால் 20 கோடி நஷ்டம் அடைந்து விட்டேன்.
சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் இந்த படத்தை தயாரித்தேன் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவர் உண்மைக்கு புறம்பாக பேசுவதாகவும் கூறியிருந்தார். இது பரப்பரப்பை கிளப்பிய நிலையில் சம்பளப் பிரச்சனையை சமரசமாக முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்து பிரச்சனையை முடித்து வைத்தது.
இப்படியாக சிவகார்த்திகேயனை வருட கணக்கில் அலைய வைத்த ஞானவேல் ராஜா தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை தயாரித்து வருகிறார். சிவக்குமார் குடும்பத்திற்கு நெருங்கிய உறவான இவர் அவர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். அதில் சில படங்கள் தோல்வியை தழுவியும் இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இவர் தயாரிக்கும் படங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். அதனாலேயே இப்போது கங்குவா பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சூர்யா சொந்தக்காரர் என நம்பி இவரிடம் வசமாக சிக்கிவிட்டதாகவும் சினிமா ஒரு கருத்து வெளியாகி பகீர் கிளப்பியும் வருகிறது.