வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஒருவேளை ஜப்பான் ஓடலனா.? தம்பியை கை பிடித்து தூக்கி விடும் சூர்யா.. 96 இயக்குனருடன் கூட்டணி

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்கு பிறகு கார்த்தியின் படத்திற்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடமிருந்து வர ஆரம்பித்துவிட்டது. தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஜப்பான் படம் இறுதி கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இப்படத்தை ஜோக்கர் படத்தின் இயக்குனர் ராஜூ முருகன் இயக்குகிறார்.

இந்தப் படம் வருகிற தீபாவளி அன்று திரையரங்கில் வெளியிடுவதற்கு தயாராகி இருக்கிறது. அத்துடன் இப்படத்தின் ஃபாஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் பொழுது இவர் நடித்த சிறுத்தை படத்தில் சந்தானத்துடன் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்றும் கார்த்தி தான் ஞாபகத்துக்கு வருகிறது.

Also read: 2023ல் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த 5 படங்கள்.. 100 கோடி கலெக்ஷன் சிவகார்த்திகேயனுக்கு டஃப் கொடுத்த ஹீரோ

அதே போல் இந்த படமும் ஒருவித கலவையான மசாலாவாக தான் இருக்கும். அதனால் இப்படம் ரசிகர்களிடமிருந்து எந்த மாதிரியான வரவேற்பை பெரும் என்று ஒரு வித பயத்திலேயே கார்த்தி இருக்கிறார். ஒருவேளை இந்த படம் ஓடுமா ஓடாதா என்ற சந்தேகத்தில் இவருடைய அடுத்த படத்தில் கமிட் ஆகிவிட்டார்.

அதாவது இவருடைய 27வது படத்தின் கதையை 96 இயக்குனர் பிரேம்குமார் உடன் கூட்டணியில் இணைகிறார். ஏனென்றால் இவருடைய 96 படம் எந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை ஏற்படுத்தியது என்று அனைவரும் அறிந்ததே. அதே போல் ஜப்பான் படம் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் இப்படத்தை வைத்து ஈடு கட்டிவிடலாம் என்று களத்தில் இறங்கி விட்டார்.

Also read: கதை இல்லாமல் மட்டமாக உருட்டும் ஜீ தமிழ் சீரியல்.. காரி துப்பும் கார்த்திகை தீபம்

அடுத்ததாக இப்படத்தின் வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க இருக்கிறார். இவர் நடித்த தனி ஒருவன் படம் எப்படி இருந்ததோ அதேபோல் இப்படத்திலும் அரவிந்த்சாமி கதாபாத்திரம் கண்டிப்பாக மக்களுக்கு பிடித்த மாதிரியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

மேலும் இப்படத்தை 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமான சூர்யா தான் தயாரிக்க இருக்கிறார். தம்பியை கைப்பிடித்து தூக்கும் எண்ணத்திலும், எப்படியும் இந்த படம் வெற்றி அடையும் அதன் மூலம் லாபத்தை சம்பாதிக்கலாம் என்று ஒரு கல்லில் இரண்டு மாங்கா என்ற ஆசையில் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்திய சூரியன் இணைந்திருக்கிறார்.

Also read: பருத்திவீரனுக்கு பின் தொடர் மொக்கை வாங்கிய கார்த்தியின் 5 படங்கள்.. வந்தியத்தேவனை வச்சு செய்த  மணிரத்தினம்

Trending News