வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இருளருக்கு சூர்யா பணம் கொடுத்ததாக சொன்னது வடிகட்டின பொய்.. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை

Actor Surya: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என்று பொதுவாக சொல்வதுண்டு. ஒரு சின்ன விஷயத்தை பேச ஆரம்பித்து, பெரிய விஷயங்கள் எல்லாம் வெளியில் வருவதற்கு தான் இந்த பழமொழி பொருந்தும். அப்படித்தான் ஞானவேல் ராஜா பருத்திவீரன் சமயத்தில் நடந்த விஷயத்தை லேசாக பேச ஆரம்பித்து, அது பெரிய பூதாகரமாக வெடித்திருக்கிறது.

பருத்திவீரன் சர்ச்சை முதலில் ஞானவேல் ராஜாவிடம் தொடங்கி, படத்தின் கதாநாயகன் கார்த்தியை பற்றி சர்ச்சைகள் கிளம்பி, தற்போது சூர்யா மற்றும் சிவக்குமாரிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் சூர்யா எந்த விஷயத்தில் மாற்றுவார் என்று காத்திருந்தவர்களுக்கு இந்த சர்ச்சை தொக்காக மாட்டிக் கொண்டதால், அடுத்தடுத்து சூர்யா சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை வெளியில் அவுத்து விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

Also Read:சூர்யாவுக்கு சிக்ஸ் பேக் ஆசையை தூண்டிய 2 ஜிம்பாடி நடிகர்கள்.. இருவரையும் ஓரம் கட்டி வரப்போகும் கங்குவா

சூர்யாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் ஜெய் பீம். இந்த படத்திற்காக அவர் நிறைய பிரபலங்களாலும் பாராட்டப்பட்டார். அந்த சமயத்தில் சூர்யா தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து ரூபாய் ஒரு கோடி நிதியை, இருளர் அமைப்பிற்காக கொடுப்பதாக சொல்லி இருந்தார். அப்போது இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

இருளர் அமைப்புக்கு நிதி கொடுத்த சர்ச்சை

சமீபத்தில் இந்த நிதியை பற்றி அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, சூர்யா இருளர் அமைப்பிற்கு கொடுத்த தொகை அவருடைய சொந்த பணம் கிடையாது. அகரம் ஃபவுண்டேஷனிலிருந்துதான் சூர்யா அந்தத் தொகையை கொடுத்திருக்கிறார். எப்படி பார்த்தாலும் அது மக்கள் அகரம் நிறுவனத்திற்காக கொடுத்த பணம் தான்.

மேலும் இருளர் நல அமைப்பு என்று அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சூர்யா அந்த ஒரு கோடியை நல திட்டங்களுக்காக கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. எப்படி பார்த்தாலும் அந்த பணம் சூர்யாவின் கைகளுக்கு தான் வந்து சேரும். படத்தில் நடித்ததோடு விட்டுவிடக்கூடாது என பிரமோஷனுக்காக அவர் இதை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பருத்திவீரன் சர்ச்சையை சுற்றி தற்போது இந்த ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்த சர்ச்சையும் சேர்ந்திருக்கிறது. சூர்யா தரப்பில் இருந்து அவர் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் சொல்லாமல் இருப்பதால்தான் இப்படி தொடர்ந்து அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. இருளர் அமைப்பிற்கு அவர் கொடுத்த நிதியை பற்றியாவது அவர் வாய் திறந்து பேச வேண்டும்.

Also Read:புயலால் தத்தளிக்கும் சென்னை, டாப் ஹீரோக்கள் சூர்யா, கார்த்திக்கை பார்த்து கத்துக்கோங்க!

Trending News