வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாக்லேட் பாய்க்குள் ஒளிந்திருந்த வில்லன்.. ஒரு வருடத்திற்கு பிறகும் கொண்டாடப்படும் சூர்யா

வாரிசு நடிகராக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு தான் சூர்யா முன்னணி அந்தஸ்தை அடைந்தார். ஆரம்ப காலகட்டத்தில் சாக்லேட் பாய் போன்று காதல் படங்களில் நடித்த இவர் திடீரென ஆக்சன் அவதாரம் எடுத்தார். இப்படி படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி கொண்ட இவர் திடீரென வில்லன் அவதாரம் எடுத்திருந்தது பலருக்கும் நம்ப முடியாத ஆச்சரியமாகவே இருந்தது.

இந்த சாக்லேட் பாய் முகத்துக்குள் இப்படி ஒரு கொடூர வில்லனா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு இருந்த கதாபாத்திரம் தான் ரோலக்ஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சர்வதேச அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

Also read: அதிர்வலையை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து.. 20 வருடங்களுக்கு முன்பே கணித்த கமல்

மேலும் நான்கு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் கவனம் திருப்பிய உலக நாயகனுக்கு இது மாபெரும் ரீ என்ட்ரியாகவும் அமைந்தது. அந்த அளவுக்கு அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதே சமயம் கடைசி சில நிமிட காட்சிகளில் மட்டுமே வந்த ரோலக்ஸ் கேரக்டரும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதிலும் இதுவரை பார்த்திராத ஒரு புதிய சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆண்டவரையே ஓரம் கட்டும் அளவுக்கு சூர்யா அந்த ஒரு கேரக்டரால் புகழ்பெற்றார். அதை தொடர்ந்து அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் ரோலக்ஸ், ரோலக்ஸ் என்றே ஆர்ப்பரித்து வந்தனர்.

Also read: கங்குவா படத்திற்காக தீயாய் உழைக்கும் சூர்யா.. நியூ லுக் போட்டோவால் எகிறிய மார்க்கெட்

இமேஜ் பார்க்காமல் எப்படி ஒரு வில்லத்தனத்தை காட்டிய சூர்யாவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அந்த வகையில் விக்ரம் படம் வெளிவந்து நேற்றோடு ஒரு வருடம் ஆகி இருக்கிறது. அதை கொண்டாடி வரும் ரசிகர்கள் இப்போது ரோலக்ஸ் கேரக்டரையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ரோலக்ஸ் கேரக்டரின் புதிய போட்டோ ஒன்றும் இணையதளத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.

அதில் ரோலக்ஸ் கெட்டப்பில் இருக்கும் சூர்யா கண்ணாடி அணிந்தபடி எதையோ ஊற்று பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த போட்டோவை தற்போது வைரல் செய்து வரும் அவருடைய ரசிகர்கள் விரைவில் விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இயக்குனருக்கு வைத்து வருகின்றனர்.

ரோலக்ஸ் கெட்டப்பில் இருக்கும் சூர்யா

surya-rolex
surya-rolex

Trending News