Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

பெரிய மனுஷன் என நிரூபித்த சூர்யா.. ஆனா இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா

பெரிய மனுஷன் என நிரூபித்த சூர்யா.. ஆனா இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கா

சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு தற்போது பாலாவுடன் தனது 41 வது படத்தை நடித்து வருகிறார். சூர்யா இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பாலாவுடன் இணைகிறார். மேலும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களை பாலா […]

சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு தற்போது பாலாவுடன் தனது 41 வது படத்தை நடித்து வருகிறார். சூர்யா இப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக பாலாவுடன் இணைகிறார். மேலும் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களை பாலா கொடுத்துள்ளார்.

ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக பணியாற்றி பல வருடங்கள் ஆனதால் தற்போது சூட்டிங்கில் இவர்கள் இருவருக்கும் பல பிரச்சினைகள் வருவதாக கூறப்பட்டது. ஏனென்றால் தற்போது சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. இதனால் பாலா பழையபடி சூர்யாவிடம் வேலை வாங்க முடியாது.

இந்நிலையில் அடிக்கடி இவர்கள் இடையே பிரச்சனை வந்ததால் சூர்யா படப்பிடிப்பில் இருந்து சென்று விட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சூர்யா சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கை தயாரிக்கிறார். அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தான் சூர்யா சென்றதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த பிரச்சனை மீண்டும் இணையத்தில் பூதாகரமாக வெடித்து இனிமேல் சூர்யா 41 ஆவது படத்தின் ஷூட்டிங் தொடங்கபடாது, இப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது என்று கூறிவந்தனர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் படக்குழுவிடம் இருந்து வெளியாகவில்லை.

இந்நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சூர்யா, பாலா படப்பிடிப்பின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட மிக விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அதற்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இணையத்தில் உலாவி வந்த வதந்திகளுக்கு சூர்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

என்னதான் பாலா, சூர்யா இடையே சண்டை வந்தாலும் அதையெல்லாம் மறந்து பெரிய மனுஷன் தனமாக சூர்யா இவ்வாறு நடந்துயுள்ளார் என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் மற்றொரு பக்கம் இப்படத்தை தயாரிப்பது சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் என்பதால் படம் பாதியிலேயே நின்று போனால் சூர்யாவுக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பதற்காக தான் இவ்வாறு சூர்யா செய்துள்ளார் எனவும் கூறி வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.