வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தர்ஷினியை கடத்தியதில் 4 கும்பல்கள் மீது ஏற்படும் சந்தேகம்.. எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் காப்பாற்றிய ஜனனியின் தோழர்

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை கடத்துட்டு போனவர்கள் யார் என்று கண்டுபிடிக்கும் நோக்கத்தில் குணசேகரன் வீட்டில் உள்ள நான்கு மருமகள் தேடி வருகிறார்கள். ஆனால் குணசேகரன் யாரோ வீட்டு பிள்ளை காணவில்லை என்பது போல் மெத்தனத்தில் வீட்டிற்குள் உட்கார்ந்து நாட்டாமை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அதிலும் கதிர் நம்ம வீட்டுப் பிள்ளையை நம் தேடிப்போய் பார்க்கலாம் என்று ஞானத்தை கூப்பிடும்போது, அங்கிருந்து வந்த குணசேகரன் யார் வீட்டுப் பிள்ளையை யார் போய் தேடுகிறது என்று கேட்கிறார். இவருடைய தோரணையும் நடவடிக்கையும் பார்க்கும் பொழுது ஒருவேளை இவர் கடத்தி இருப்பாரோ என்று தோன்றுகிறது.

ஏனென்றால் மொத்த பழியையும் ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி மீது ஈசியாக போட்டு விடலாம். அத்துடன் தர்ஷினி ஆசைப்பட்டபடி விளையாட்டிலும் பங்கு கொள்ளாமல் ஆக்கலாம் என்ற காரணங்களாக கூட இருக்கலாம். இவருக்கு அடுத்தபடியாக எப்படியாவது தன் மகனுக்கு தர்ஷினியை கல்யாணம் பண்ணி வைத்து விட வேண்டும் என்று ஜான்சி ராணி பிளான் போட்டு தூக்கி இருப்பாரோ என்ற சந்தேகமும் வருகிறது.

Also read: டாம் அண்ட் ஜெரியாக இருந்த ராஜிவை திருமணம் செய்த கதிர்.. பாக்யா தலைமை நடந்த ரகசிய கல்யாணம்

அடுத்ததாக கதிர் மற்றும் குணசேகரனை பழிவாங்கும் விதமாக கிள்ளிவளவன் உள்ளே நுழைந்து வில்லத்தனத்தை காட்டுவதற்காக தர்ஷினியை கடத்தி பணத்திற்காக பிளாக்மெயில் பண்ணவும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களை எல்லாம் தாண்டி புதுசாக ஜனனி அப்பத்தா குடும்பமாக மெய்யப்பன் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்.

இவர்கள் வந்த பிறகு தான் புதுசு புதுசாக ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கதிர் கை கால் உடைத்ததும் யார் என்று இதுவரை தெரியவில்லை. அத்துடன் தர்ஷினியும் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதற்கு மெய்யப்பன் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி தர்ஷினி அங்கிருந்து தப்பித்து வரும் வழியில் மறுபடியும் மாட்டிக்கொள்கிறார். ஆனால் தர்ஷினிக்கு இருக்கும் தைரியத்தினால் இவரிடமும் இருந்து தப்பித்து ஓடி வருவார். ஜனனியின் தோழராக இருக்கும் கௌதமிடம் வந்து அடைவார். அதன் மூலம் ஜீவானந்தம், தர்ஷினியின் கனவை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Also read: குணசேகரனுக்கு எமனாக நிற்கப்போகும் கதிர்.. என்ட்ரி கொடுக்கும் ஜீவானந்தம், தலைகீழாக மாறும் எதிர்நீச்சல்

Trending News