simbu-str48-kamal

சிம்புவை நம்பி மோசம் போன ஆண்டவர்.. நம்பிய கமலுக்கு மொத்தமாய் அடித்த விபூதி

சினிமாவை மொத்தமாய் கரைத்துக் குடித்தவர் சிம்பு. ஆரம்பத்திலிருந்து கமலுக்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருந்து வருகிறது

gautham-menon

இந்த 5 பேர் இல்லாமல் பெரிய பட்ஜெட் படம் வெளிவருவதில்லை.. இயக்கத்தை தூக்கிப்போட்டு நடிகராக ரவுண்டு கட்டும் GVM

Top 5 Celebrities in Big Budget Film: சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமே படத்திற்கு முக்கியமல்ல, ஒரு சில ஸ்ட்ராங்கான கேரக்டர்கள் படத்தின் வெற்றிக்கு முக்கிய

simbu-new-look-1

உங்கள நம்பி நான் நாசமா போனது போதும்.. விரக்தியில் கல்யாணத்திற்கு இப்பவுமே ரெட் கார்ட் போடும் சிம்பு

40 வயசு ஆச்சு இன்னும் ஒண்ணுமே நடக்கவில்லை என்று விரக்தியில் சிம்பு எடுத்த அதிரடி முடிவு.

STR Nayan

சிம்புவை நம்பி நடுத்தெருவுக்கு வந்த 5 பிரபலங்கள்.. நயன்தாராவால் கோர்ட் வரை போன சம்பவம்

Simbu – Nayanthara: படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான் என்ற பழமொழி சிம்புவுக்கு தான் சரியாக இருக்கும். இப்போது இருக்கும் முன்னணி ஹீரோக்களுக்கு இல்லாத

simbu dhanush rajini aniruth

தனுஷ் முதல் ரஜினி வரை மரண ஹிட் கொடுக்கும் அனிருத்.. ஒட்டவே முடியாத அளவிற்கு சர்ச்சையை கூட்டிய சிம்பு

முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் அனிருத்.

simbu-kamal

பட்ஜெட்டை முடிவு செய்த கமல்.. முழுசா முடி வளர்த்த சிம்புவுக்கு காட்டிய க்ரீன் சிக்னல்

சிம்பு வெளிநாடு சென்று ஓய்வு எடுக்கிறார், படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என அவ்வப்போது செய்திகள் வெளியானது.

sj-surya

பணத்தை வாங்கி தயாரிப்பாளர்களை டீலில் விட்ட 5 ஹீரோக்கள்.. அட்வான்ஸ் தொகையை ஏப்பமிட்ட எஸ்ஜே சூர்யா

கிட்டத்தட்ட 5 ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடமிருந்து அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டு அவர்களை டீலில் விட்டிருக்கிறார்.

mark-antony-vishal

முதல்முறையாக 100 கோடி கல்லா கட்டிய 11 ஹீரோக்கள்.. 46 வயதில் சாதித்து காட்டும் மார்க் ஆண்டனி

கிட்டத்தட்ட 11 நடிகர்கள், அவர்கள் நடித்த படத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலை பார்த்து இருக்கிறார்கள்.

simbu-STR48

தயாரிப்பாளர்களை கோர்ட், கேஸ்னு சுத்தலில் விடும் சிம்பு.. காசுக்காக இறங்கி நடிச்ச விளம்பரம்

Actor Simbu:  சிம்புவின் அலும்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டு தான் போகிறது. அதாவது ஆரம்பத்தில் சிம்பு படக்குழுவில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு நிறைய சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஆனால் மாநாடு படத்திற்குப் பிறகு மொத்தமாக தன்னை மாற்றிக்கொண்டு முழுவதுமாக படங்களில் செயல்பட உள்ளதாக வெளிப்படையாக பேசி இருந்தார்.

இனி என்னுடைய ரசிகர்கள் யாரும் அவமானப்படக்கூடாது, அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக நடந்து கொள்வேன் என வசனங்களை விட்டெறிந்தார் சிம்பு. ஆனால் அவர் இப்போது செய்திருக்கும் காரியம் தான் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. அதாவது சமீபத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் சிம்பு மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

Also Read : சிம்புவிடம் ஒரு கோடி எடுத்து வைக்க சொன்ன தயாரிப்பாளர்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நீதிபதி

அதாவது கோவிட் தொற்று முதல் அலைக்கு பிறகு கொரோனா குமார் படத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களினால் இந்த படம் தள்ளிப் போக அதன் பிறகு கால்ஷீட் கொடுக்காததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக சிம்பு பெற்றிருந்த நிலையில் ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஒரு வருடத்திற்குள் சிம்பு நேரம் ஒதுக்கியும் படம் எடுக்காததால் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க தேவையில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு தயாரிப்பாளர்களை கோர்ட்டு, கேஸ் என்று அலையவிட்டுக் கொண்டிருக்கும் சிம்பு காசுக்காக ஒரு காரியம் செய்துள்ளார்.

Also Read : மணிரத்தினத்திடம் எடுபடாமல் போன சிம்புவின் சில்மிஷங்கள்.. பாம்பு புற்றிலே மகுடி வாசிச்சாலும் வேலைக்காகல

அதாவது தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுக்க நேரமில்லாத சிம்பு இப்போது விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதாவது போக்குவரத்து சம்பந்தமான அபிபஸ் என்ற ஒரு இணையதள செயலி விளம்பரத்தில் மாஸ் லுக்கில் சிம்பு நடித்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

சிம்பு விளம்பரங்களில் நடிப்பதை தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் படங்களில் தயாரிப்பாளர்கள் பெரிய தொகை போட்டு காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இவ்வாறு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டு விளம்பரங்களில் நடிப்பது மிகவும் வேதனை அளிப்பதாக தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள்.