வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கெமிஸ்ட்ரியில் சொதப்பிய சிம்பு.. அடுத்த வாய்ப்பிற்காக வலைவிரித்த நடிகை

ஒரு சமயத்தில் தமிழ் திரைப்படங்களில் அனைத்து முன்னணி ஹீரோவுக்கும் ஜோடியாக நடித்து பிஸியாக இருந்தவர் அந்த தமிழ் நடிகை. இவர் தமிழில் கடைசியாக ஆக்சன் திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார். அதன்பிறகு இவர் தமிழில் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

அவர் வேறு யாருமல்ல நடிகை தமன்னா தான். தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த தமன்னா தற்போது ஹிந்தியில் ஓரிரு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் தொடர்களிலும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் தமிழ் நடிகர்களை பற்றிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நடிகர் சிம்புவை பற்றியும் ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது என்னவென்றால் நான் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நடித்துள்ளேன்.

ஆனால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கும் சிம்புவுக்கும் இடையே காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி சரியாக வேலை செய்யவில்லை. இது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.

மேலும் சிம்புவுடன் நடிப்பதற்கு மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்புக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

சிம்பு நடித்த திரைப்படங்களில் மிகப்பெரிய தோல்வியை தழுவிய திரைப்படம் இது. இதன் பிறகு சிம்பு நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. தற்போது மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலமாகத்தான் அவர் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக தான் அவர் சிம்புவுடன் மீண்டும் ஜோடி போட ஆசைப்படுகிறார்.

Trending News