வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கவர்ச்சியை ஆயுதமா வச்சு மண்ணை கவ்விய 6 நடிகைகள்.. காட்டுனா போதுமா.! கொஞ்சமாச்சும் நடிக்கணும்

தமிழ் சினிமாவில் நடிகைகள் வெகுநாட்கள் சினிமா துறையில் இருந்து பல படங்களில் நடித்து ஓரிரு படங்களிலாவது தன்னுடைய நடிப்பில் முத்திரை பதித்தால் தான் அவர்களை இந்த சினிமா ஞாபகம் வைத்துக்கொள்ளும். அப்படி இல்லை என்றால் அவர்கள் மறக்கப்படுவார்கள். அப்படி மறக்கக்கூடாது என்பதற்காக நிறைய நடிகைகள் பல்வேறு ஆயுதங்களை கையில் எடுப்பார்கள்.

அதில் முக்கியமானது கவர்ச்சி ஆயுதம், கவர்ச்சி காட்டினால் நாம் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைக்கும் நடிகைகள் அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டி அப்படியே ஓரங்கட்டப்பட்டு விடுகின்றனர். அப்படி கவர்ச்சியை நம்பி களம் இறங்கி மண்ணைக் கவ்விய நடிகைகள் பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்

பூனம் பாஜ்வா: ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக சினிமாவில் அறிமுகமான இவர் போகப்போக தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்தார். முதல் படத்தில் இப்படி ஒரு பெண்ணா என்று பார்ப்பவரை வியப்பில் ஆழ்த்திய இவர் போகப் போக என்னா பொண்ணுடா என்று சொல்லும் அளவிற்கு கிளாமரில் கொஞ்சம் டோஸ் தூக்கி காட்டினார். இவர் காட்டிய கிளாமரில் கோடம்பாக்கமே கிளுகிளுத்தது. அதன் பிறகு அதையே தொடர்ந்து அனைத்து படங்களிலும் செய்ய உப்பு சப்பு இல்லாத கதாப்பாத்திரமாக நடித்து இறுதியில் காணாமேலே போய்விட்டார்.

ஷெரின்: பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் க்யூட்டாக இந்தப் பெண் இருக்கிறாள் என்று தமிழ் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்தவர்தான் ஷெரின். ஆனால் வெகுசில படங்களில் மட்டும்தான் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரும்பாலான படங்கள் இவருக்கு வாய்ப்பில்லாமல் போனது. இதனால் நாமும் காட்ட வேண்டியதை காட்டினால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என்று நினைத்து ஷெரின் கவர்ச்சியில் கவனம் செலுத்தினார். இருந்தாலும் அதிலும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் பத்தில் பதினோராவது ஹீரோயினாக அவரும் இருக்கிறார். இப்போது உடம்பை குறைத்து இன்ஸ்டாக்ராமை கிறங்கடித்து வருகிறார்.

ரெஜினா காசண்ட்ரா: ரெஜினா காசண்ட்ரா ஆரம்பப் படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல கதாபாத்திரங்களில் தோன்றி நல்ல நடிகை என்ற பெயர் பெற்றிருந்தார். நல்ல நடிகை என்று பெயர் பெற்றால் போதுமா பணம் சம்பாதிக்க வேண்டும் அல்லவா அதனால் அவரும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ரெஜினாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை. அதன் பிறகுதான் அவரும் கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுத்து ரசிகர்களை கிறங்கடித்தார். முத்த காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் போன்றவற்றில் ரசிகர்களுக்கு தாராளமாக தன் நடிப்பை காட்டினார். இதனால் நிலைத்து விடலாம் என்று நினைத்த இவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆண்டிரியா: ஒரு பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா அதன் பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்து நல்ல நடிகை என்ற பெயரும் பெற்றார். ஆனால் ஆரம்பத்திலிருந்தே இவருடைய நோக்கம் கவர்ச்சி பக்கம் தான் இருந்தது. அவர் பேசுகின்ற வசனங்களில் கூட அதைப் பார்க்க முடியும். இவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சியை நம்பி என்று அவர் தனது அடுத்த படியைநகர்த்த நினைத்தாரோ அன்றே அவரது கேரியரில் மிகப்பெரிய ஒரு சறுக்கல் ஏற்பட்டது. இப்போதுகூட மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு படத்தில் முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார். இப்போது இவர் நம்பி கவர்ச்சி காட்டி இருக்கும் இந்த படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மீரா மிதுன்: சமூக வலைத்தளத்தில் இதுவரை ஒரு நடிகையை அதிகமாக திட்டி தீர்த்து இருக்கிறார்கள் ரசிகர்கள் என்றால் அது முக்கியமாக மீராமிதுன் ஆக தான் இருக்க முடியும். இவரை நடிகை என்று சொல்வதா இல்லை மாடல் என்று சொல்வதா என்ன சொல்லி அழைப்பது என்று கண்டிப்பாக தெரியவில்லை. ஆனால் வாரம் ஒரு முறையாவது இவருடைய உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோக்கள் சமூகவலைதளத்தில் ரிலீசாகும். ஆனால் இவர் வாயால் வந்த வினை என்பது போல ஒவ்வொரு முறையும் வாய் பேசி மீரா மிதுன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அளவுக்கு மீறி ஆடைகளைக் குறைத்து உடலைக் காட்டி கவர்ச்சியில் நாம் முன்னேறி விடலாம் என்று நினைத்த மீரா மீது வழக்குகள் போட்டு வீட்டில் பேசாமல் இரு என்று அனுப்பி விட்டனர். ஆனால் இப்போதும் இவரின் சேவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ரம்யா பாண்டியன்: ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின் பிக்பாஸில் புகழ்பெற்றார் ரம்யா பாண்டியன். திடீரென இடுப்பு கவர்ச்சி காட்டி புகைப்படம் வெளியிட்டு சமூக வலைத்தளத்தை அதிர வைத்தார் ரம்யா பாண்டியன். அவ்வளவு கவர்ச்சி காட்டியும் படவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை, இதனால் தற்போது மிகுந்த வருத்தத்தில் உள்ளாராம்.

அஞ்சலி: தமிழ் சினிமாவில் சாதாரண பக்கத்து வீட்டு பெண் போல அறிமுகமானவர்தான் அஞ்சலி. ஆரம்பத்தில் நல்ல தமிழ் உச்சரிப்பு நல்ல வாய்ஸ் என்று இவரின் பின்னால் இளைஞர்கள் தஞ்சமடைந்தனர். தன் இதயத்திலும் இடம் கொடுத்தனர் ஆனால் போகப்போக அஞ்சலிக்கு மார்க்கெட் ஏறவில்லை குறையத்தான் செய்தது. எனவே அவரும் கவர்ச்சி காட்டி தான் இனி பிழைக்க முடியும் என்று நினைத்து கவர்ச்சியில் களமிறங்கினார். ஆனால் அதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அடுத்தடுத்து பல படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்து இப்போது தமிழ் சினிமாவில் தேடப்படும் ஒரு நடிகையாகவே ஆகி விட்டார்.

Trending News