வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல் படமே வெள்ளிவிழா கண்ட 5 தமிழ் நட்சத்திரங்கள்.. இன்று வரை அதே தெனாவட்டில் திரியும் அமீர்

Tamil actors first Hit Movies: திறமையோடு நேரமும் சூழலும் சரியாக அமைந்தால் கிடைப்பது வெற்றியே  என்பதற்கு இணங்க தன் கேரியரை வெற்றியுடன் துவங்கிய 5 திறமையான  தமிழ் நட்சத்திரங்களை காண்போம்

கிழக்கே போகும் ரயில்: 365 நாட்களுக்கு மேலாக ஓடி மெகா ஹிட் அடித்த  ராதிகாவின்  முதல் படமான கிழக்கே போகும் ரயிலை பாரதிராஜா இயக்கியிருந்தார்.  எம் ஆர் ராதாவின் மகள் என்ற அடையாளத்துடன் களமிறங்கிய ராதிகா, இப்படத்தில் வசனங்களை பிறர் சொல்ல கேட்டு உள்வாங்கி நடித்திருந்தார்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே: வித்தியாசமான உடல் மொழியாலும், பாவனைகளாலும் ரசிகர்களை கவர்ந்த மோகனுக்கு கதாநாயகன் அந்தஸ்து கொடுத்தது இப்படம்.  புதுமையான கதைகளை  இயல்பான நடிப்பின் மூலம் வெளிக்கொண்டுவரும் மகேந்திரனின் இப்படம்  திரையில் பல நாட்கள் ஓடி வசூலில் சாதனை படைத்தது.

Also Read: பறக்க ஆசைப்பட்டு கொஞ்சநஞ்சம் இருக்கிறதையும் இழந்த 5 சூப்பர் நடிகர்கள்.. உலகநாயகனே ஒதுக்கிய அந்த இளம் புயல்

என் ராசாவின் மனசிலே: ராஜ்கிரண் சினிமா விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தவர். கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில்  என் ராசாவின் மனசிலே அதிக நாட்கள் திரையில் ஓடிய ராஜ்கிரணின் முதல் படமாகும். திரையில் மக்களின் நாடித்தெடுப்பை அறிந்து செயல்படும் ராஜ்கிரண், கிராமத்தில் வாழும்  முரட்டு இளைஞனாக பட்டையை கிளப்பி இருப்பார்.

மண்வாசனை: பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மண்வாசனை படத்தில் பாண்டியன் புதுமுக நடிகராக அறிமுகமானார். பாரதிராஜா இப்படத்திற்கு கதாநாயகனை தேடிக் கொண்டிருக்கும்போது மதுரையில் இரவு நேரத்தில் தன்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த பையனின் முகவெட்டு பிடித்து போய் இவனை இப்படத்தில் நடிக்க வைத்தால் என்ன? என்று யோசித்து நடிக்க வைத்தார். பாரதிராஜாவின் கலைப்பட்டறையில் செதுக்கப்பட்ட பாண்டியன் மண்வாசனையில் கிராமத்து இளைஞராக படபடவென வசனங்கள் பேசி மண்வாசனையை தமிழ் நெஞ்சங்கள் தமிழ் மக்கள் அனைவரும் நுகர செய்திருப்பார்.

பருத்திவீரன்: அமீரின்இயக்கத்தில் வெளிவந்த கார்த்தியின் முதல் படம். கார்த்தி,சரவணன் மற்றும் கஞ்சா கருப்பு வின் காம்போ நகைச்சுவையில் வயிறு குலுங்க வைத்தது. முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு கார்த்தியின் கேரியரில் வெற்றி படமாக அமைந்தது பருத்திவீரன். இப்படத்தின் மூலமாக சிறந்த நடிகருக்கான விருதும் கார்த்திக்கு கிடைத்தது. அமீர் இந்த படத்தில் கார்த்தியை வளர்த்து விட்டதனால் இன்று வரை தெனாவட்டில் திரிகிறார் என்று ஞானவேல் ராஜா குற்றம் சாட்டி வருகிறார்

Also Read: 40 வருடங்களாக ஹீரோவாக நடிக்கும் 5 நடிகர்கள்.. கெத்து குறையாமல் வசூல் வேட்டையாடும் சூப்பர் ஸ்டார்

Trending News