Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கதைத்தேர்வில் கோட்டை விட்ட கதாநாயகர்கள்: தமிழ் சினிமாவின் கசப்பான உண்மை!

கதைத்தேர்வில் கோட்டை விட்ட கதாநாயகர்கள்: தமிழ் சினிமாவின் கசப்பான உண்மை!

சினிமா என்பது ஒரு நிஜமான சதுரங்க வேட்டை. இங்கு எப்போது யாருக்கு வெற்றி கிடைக்கும், யாருடைய வாய்ப்பு கைநழுவிப் போகும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. திறமையும் உழைப்பும் மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை; சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான […]

சினிமா என்பது ஒரு நிஜமான சதுரங்க வேட்டை. இங்கு எப்போது யாருக்கு வெற்றி கிடைக்கும், யாருடைய வாய்ப்பு கைநழுவிப் போகும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. திறமையும் உழைப்பும் மட்டுமே வெற்றியைத் தீர்மானிப்பதில்லை; சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளே ஒருவரது வெற்றியை தீர்மானிக்கின்றன.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி, ஆர்யா, ஜெய், பரத் மற்றும் விஷால் ஆகிய மூவரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள். அவர்களுக்கு என்று தனித்துவமான ரசிகர் பட்டாளமே உருவானது.

ஆனால், காலத்தின் மாற்றம் மற்றும் அடுத்தடுத்து சந்தித்த தொடர் தோல்விகள் அவர்களின் பயணத்தில் முட்டுக்கட்டையாக அமைந்தன. சரியான கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதும், படத்தின் திரைக்கதை அமைப்பில் காட்டிய தலையீடுகளும் அவர்களது திரை வாழ்க்கையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின.

“காலத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்ற சினிமா விதியை மறந்து செயல்பட்டதே இந்த சறுக்கல்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. பழைய பாணி கதைகளையே மீண்டும் மீண்டும் நம்பியதும், வேகமாக மாறிவரும் சினிமா ரசிகர்களின் ரசனையைப் புரிந்து கொள்ளத் தவறியதும் அவர்களைப் பின்னுக்குத் தள்ளியது.

இன்றைய தலைமுறை இளைஞர்களின் எதிர்பார்ப்பு முற்றிலும் மாறுபட்டவை. தற்போதைய சினிமா ரசிகர்கள் என்ன மாதிரியான கதைகளை விரும்புகிறார்கள், அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை இளைய தலைமுறை இயக்குநர்களும் நடிகர்களும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

அதனால்தான் பிரதீப் ரங்கநாதன், மணிகண்டன், கென் போன்றோர் வெற்றி பெற்று வருகிறார்கள்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.