வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

50 வருடமா சினிமாவிற்காக ஓடிக்கொண்டிருக்கும் 5 நடிகர்கள்.. கொல செய்ய நினைத்தவரையே கொண்டாடிய கமல்

Tamil Actors who ruled more than 50 years tamil film industry through his talent: தமிழ் சினிமாவில்  இளம் தலைமுறையினர் பலர் ஒன்று இரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போய்விடுகின்றனர் ஆனால் அரை நூற்றாண்டு கடந்தும் இளமை மாறாமல் கடின உழைப்பின் மூலமும் தனி திறமையின் மூலமும் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த  நட்சத்திரங்கள் இதோ,

கமல்: “ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை ஆஸ்கார் தூரம் இல்லை” என்றும் அளவுக்கு இளமையுடன் கமல், 60 ஆண்டுகளுக்கும் மேல் பன்முகத் திறமைகளுடன் தமிழ் சினிமாவில் கோலோச்சி, இளம் தலைமுறைக்கு டஃப் கொடுத்து வரும் கமல் தமிழ் சினிமாவின் பெருமையே.

ரஜினி: 1975 தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம் 2025 வந்தால் அரை நூற்றாண்டை சமன் செய்கிறது. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் கால் பதித்து தனது ஸ்டைல் மற்றும் பஞ்சு டயலாக்குகளின் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தலைவர் என கொண்டாட வைத்துள்ளார்.

Also read: ரஜினிக்கு இவ்வளவு படங்கள் தோல்வியா.? அப்படி இருந்தும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய தலைவர்

ஜெமினி கணேசன்: தமிழ் சினிமாவின் முதல் பட்டதாரி நடிகர் என்றால் அது ஜெமினி கணேசன் தான். எம்ஜிஆர், சிவாஜி இரண்டு  ஜாம்பவான்களுக்கு இடையே கவித்துவமான காதலின் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருந்த இந்த கிளாசிக் காதல் மன்னன், தான் ஏற்ற கதாபாத்திரங்கள் மூலம் காதலை கௌரவ படுத்தினார். 1947 ஆரம்பித்த இவரின் கலைப்பயணம் 2002 வரை தொடர்ந்தது.

சிவாஜி: “நடிப்புக்கு ஒரு சிவாஜி” என்று இலக்கணம் எழுதிய இந்த கணேசன்  பராசக்தியின் மூலம் 1952 சினிமாவில் அடி எடுத்து வைத்தார். தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் திரையுலக ஆண்ட இந்த ஜாம்பவான் பக்தி, காதல், தத்துவம், காவியம், விடுதலை என எதையுமே விட்டு வைக்காமல் அரை நூற்றாண்டாக தமிழ் சினிமாவிற்கு சேவை செய்தார் என்று சொல்லலாம்.

நாகேஷ்: ஒல்லியான தேகம், சிறப்பான முக பாவனைகள், அசாதாரணமான காமெடி வசன உச்சரிப்புகள் என தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், குணசித்திர வேடத்திலும்  சகலகலா வல்லவனாக இருந்தார் நாகேஷ். தொடர்ந்து மூன்று தலைமுறைக்கும் மேல் நடித்த நாகேஷ் மற்றும் கமலஹாசனின் நட்பு அபாரமானது. பாலச்சந்தர் அவர்கள் நடிப்பில் நாகேஷை கொண்டாடும்போது வெறுப்படைந்த கமல் அவரை தலைகாணியை அமுக்கி கொலை செய்யலாம் என்று கூட கோபத்தில் வெறுப்படைந்தாராம். பின்னாளில் அவருடன் நடித்த போதுதான் இவரின் நடிப்பு திறமையை கண்டு அசந்து போனார்.

Also read: ஆளவந்தானிடம் சிக்கிக் சின்னா பின்னமான முத்து.. வசூலில் சாதனை படைத்த கமல்

- Advertisement -spot_img

Trending News