ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ரொம்ப அல்பத்தனமாய் நடந்த ஹீரோக்கள்.. அஜித் விஜய்யை கேவலப்படுத்தும் விதமாக இழுத்த வம்புகள்

நடிகர்கள் சிலர் தங்களின் மீது கவனம் திரும்புவதற்கு, தங்களின் படங்கள் வெற்றியடைவதற்காக ரொம்பவும் அல்பத்தனமாய் நடந்து கொள்வார்கள். தங்கள் செய்த தப்பை மறைப்பதற்காக கூட சில நேரம் ஏதாவது ஒன்றை யோசிக்காமல் செய்து விடுவார்கள். அப்படி அல்பத்தனமாய் ஏதாவது ஒன்றை செய்து பின்னர் நெட்டிசன்களால் கிழித்து தொங்கவிடப்பட்ட சம்பவங்களும் நடந்தது உண்டு.

பாபி சிம்ஹா: தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார். .இவர் நடித்த அக்னி தேவி என்னும் படத்தில் மதுபாலா வில்லியாக நடித்திருப்பார். ஆனால் பாபி சிம்ஹா மதுபாலா சீன்களை தூக்க சொல்லி இருக்கிறார், இல்லையென்றால் நடிக்க வரமாட்டேன் எனக் கூறிவிட்டார்.

Also Read: இயக்குனர்கள் கொடுத்த டார்ச்சரால் அஜித் கைவிட்ட 5 படங்கள்.. லட்டு மாதிரி சூர்யாவிற்கு அடுத்த ஜாக்பாட்

வைபவ் : மங்காத்தா படத்தில் அஜித் பைக் ஓட்ட, பின்னால் வைபவ் அமர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கும். நடிகர் அஜித் தான் அந்த பைக் ஸ்டண்ட் சீன்களை செய்தார் என்று பேட்டிக்கு பேட்டி சொல்லி படத்திற்கு பிரமோசனை ஏற்படுத்தினார். ஆனால்அந்த பைக் ஸ்டண்ட் சீன்கள் அவர் செய்யவில்லை.

ஏ ஆர் முருகதாஸ்: விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படத்தின் கதை இன்னொருவருக்குள்ளது அவரின் படத்தை எடுத்து தன் கதை என பிரச்சனை செய்தார் ஏ ஆர் முருகதாஸ். அந்த தீர்ப்பு பாக்யராஜிடம் சென்று இது ஏ ஆர் முருகதாஸ் கதை இல்லை என்று நிரூபிக்கப்பட்டது. கையும் களவுமாக மாட்டி கொண்ட முருகதாஸ், விஜய் படம் என்றாலே நீங்கள் பிரச்சனை செய்வீர்கள் என்று விஜய்யை இந்த பிரச்சனையில் இழுத்து விட்டார். ஆனால் விஜய் இதிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also Read: கொல பசியில் பழைய பாணிக்கு திரும்பிய சிம்பு.. சர்ப்ரைஸ் ஆக கொடுத்த STR48 அப்டேட்

கோமாளி அஸ்வின்: ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் அடைந்த அஸ்வின், இதுவரை 40 கதைகளை கேட்டு நான் தூங்கி இருக்கிறேன் என்று கேவலமாக பேசினார். இதற்காக பல எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

சிம்பு: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன், அசாராதவன், அடங்காதவன் படம் பிளாப் ஆகிவிடும் என்று தெரிந்தும் அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு அவர் பல பிரச்சினை கொடுத்தார்.

விஷால்: நடிகர் சங்கத் தேர்தலில் என்னை அடித்து விட்டனர் என்று வெளியில் வந்து அழுது கொண்டு, மயக்கம் போட்டு விழுவது போல் பயங்கரமாக சீன் போட்டு பேட்டி கொடுத்தார். ஆனால் அவரை யாரும் பிடிக்கவில்லை.

Also Read: பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த கௌதம் மேனன்.. காப்பாற்றிவிட்ட விஜய் பட தயாரிப்பாளர்

 

Trending News