வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஹீரோயின்கள் மத்தியில் அமீர் வளர்த்த கலாச்சாரம்.. கெட்டியாக பிடித்து பெயரைக் காப்பாற்றிய 5 நடிகைகள்

Tamil actresses lead strong characters: சினிமாவில் கதாபாத்திரங்களில் நடிகர்களுக்கு வெயிட்டான ரோலே கொடுத்துவிட்டு நடிகைகளை டீலில் விட்டு விடுவார்கள். சில படங்களில் மட்டுமே நடிகைகளுக்கு அழுத்தமான வலிமையான கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் இறுதியில் அன்பில் உருக வைத்து விடுவர். அப்படியான கதாபாத்திரங்கள் அமைவது அரிதான ஒன்று. துணிச்சலான கதாபாத்திரங்களில்  யதார்த்தமாக நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருந்த நடிகைகள் சிலர்

அஞ்சலி: எங்கேயும் எப்போதும் படம் அஞ்சலிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம். பெண்கள் பலரும், இப்படித்தான் துணிச்சலாக இருக்கணும் என்று புகழுமாறு துணிச்சலான பெண் வேடத்தில் இயல்பாக  நடித்து அனைவரின் மனதிலும் ஒட்டிக் கொண்டார்.  நாயகனிடம் மிரட்டும் தோணியில் பேசி இருந்தாலும் இறுதியில் அவரின் அன்பை வெளிப்படுத்தும் போது அனைவரையும் கண்கலங்க செய்து இருப்பார்.

ரித்திகா சிங்:  ஏய் சண்டைக்காரி பாடலுக்கு ஏற்ப “இறுதி சுற்று” படம் முழுவதும் சண்டைக்காரியாகவே  நடித்திருப்பார் ரித்திகா சிங். ரியல் பாக்ஸர் ஆக இருந்தாலும் ரீலிலும் அதே பாத்திரத்தை ஏற்று மீன் விற்கும் பெண்ணாக நடிப்பில் அசத்தியிருந்தார் நமது ரித்திகாசிங், துல்கருடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய ரித்திகா தற்போது  பெண்களைப்  மையமாக வைத்து எடுக்கப்படும் குறும்படத்தில் நடிப்பதாக செய்தி.

Also read: அமீர்க்கு ஒன்னுனா நாங்க சும்மா இருக்க மாட்டோம் கௌதம், வீரா.. ராஜனுக்கு வக்காலத்து வாங்கிய 6 பிரபலங்கள்

அபர்ணா பாலமுரளி:  நடிகை பாடகி என பல திறமைகளை உள்ளடக்கிய மலையாள கன்னியான அபர்ணா பாலமுரளி, தமிழில் எட்டு தோட்டாக்கள்,சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்திருந்தார். படத்தில் கொஞ்சம் முரட்டுத்தனமான பெண் என்பது போல் தோன்றி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டிருப்பார். தன் உருவ தோற்றத்திற்காக பல விமர்சனங்களை எதிர்கொண்ட அபர்ணா உருவ கேலி செய்பவர்களை காட்டமாக தாக்கி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ்: மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், சாணி காயிதம் படத்தில் இயல்புக்கு மீறி தன் நடிப்பில் வெளுத்து வாங்கி இருப்பார் பழிவாங்கும் பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ் படத்தில் கெட்ட வார்த்தைகளை சாதாரணமாக பேசி இருப்பார். துணிச்சலுடன் கத்தி எடுப்பது, குத்துவது, வெட்டுவது என சம்பவங்களை அசால்டாக செய்திருப்பார்.

ஆண்ட்ரியா: ராம் இயக்கிய தரமணியில் ஆல்தியா கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருந்தார். நடைமுறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ளமாறு கடினமான வலிமையுள்ள பெண் பாத்திரத்தை செதுக்கியிருந்தார் ராம். ஆண்ட்ரியாவோ கதாபாத்திரத்தை உள்வாங்கி தனக்கே உரிய செம்மையான நடிப்பால் அனைவரையும்  தரைமட்டம் ஆக்கிவிட்டார்.

Also read: முத்தழகு இல்லன்னா இறுதி சுற்று மதி உருவாயிருக்க முடியாது.. அமீரை உச்சி குளிர வைத்த சுதா கொங்கரா

Trending News