தமிழ் சினிமாவில் கின்னஸ் ரெக்கார்டு என்பது ஒரு மிகப்பெரிய விஷயம். அந்த சாதனையை தமிழ் சினிமாவில் நடிகர், நடிகை, இசையமைப்பாளர், பாடகர் என பலர் சாதனை படைத்துள்ளனர். அவ்வாறு கின்னஸ் சாதனை படைத்த 5 பிரபலங்களை பார்க்கலாம்.
எஸ்பிபி: எஸ்பிபி அவர்கள் தன்னுடைய 74 ஆவது வயதில் காலமானார். எஸ்பிபி பல மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இதனால் இவர் இறந்தபிறகு கின்னஸ் புத்தகத்தில் எஸ்பிபி பெயர் இடம் பெற்றுள்ளது. இது தவிர 6 தேசிய விருதுகளையும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் எஸ்பிபி பெற்றுள்ளார்.
மனோரமா: தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமா 1985 இலிருந்து தன் திரைப் பயணத்தை தொடங்கி கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனால் மனோரமாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகும் திரைப்படங்களில் நடித்து இறப்பதற்கு முன்பு வரை 1500 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜெயலலிதா: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பெயரும் கின்னஸ் ரெக்கார்டில் இடம் பெற்றிருந்தது. இவர் சினிமா, அரசியல் என இரு துறைகளில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டினார். ஜெயலலிதா தன்னுடைய வளர்ப்பு மகளின் திருமணத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் நடத்தினார். இந்தத் திருமண வரவேற்பிற்கு மட்டும் 75 கோடி செலவு செய்து செய்திருந்தார். இந்த திருமணம் உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கமலஹாசன்: உலக நாயகன் கமலஹாசனின் வாழ்க்கை வரலாறு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கமல் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருந்தார். இந்த புத்தகத்தின் தலைப்பு 1458 எழுத்துக்கள் மற்றும் 330 சொற்களைக் கொண்டிருந்தது. இதற்கு முன்பு 2007ல் 1,433 மற்றும் 290 வார்த்தைகளில் தலைப்பு கொண்ட இத்தாலியரின் புத்தகத்தின் சாதனையை கமலஹாசனின் வரலாறு புத்தகம் முறியடித்துள்ளது.
ஏ ஆர் ரகுமான்: இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் பெயரும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் 6 தேசிய விருதுகள், 32 பிலிம்பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், 2 ஆஸ்கர் விருதுகள், பாப்தா, கிராமி விருதுகள் என சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் எண்ணற்ற விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் 265 மொழிகளில் 265 மொழிகளில் பாடிய “மா துஜே சலாம்” அசல் பாடலின் இசையமைப்பாளராக கின்னஸ் உலக சாதனை பெற்றார்