முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அதிகளவு தோல்வி அடைந்தாலும், அவர்கள் நடித்த முந்தைய திரைப்படங்கள் அவர்களை ரசிகர்களிடம் நினைவுகூற வைக்கப்பட்டே இருக்கும்.அப்படிப்பட்ட திரைப்படங்களில் அவர்களே பார்டு 2 நடித்தாலும், அந்த நடிப்பை திருப்பி அதே மாதிரி கொடுக்க இயலாது. அப்படிப்பட்ட திரைப்படங்கள் பற்றியும் நடித்த நடிகர்களை பற்றியும் தற்போது பார்க்கலாம்.
ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 168 திரைப்படங்கள் வரை நடித்துள்ள நிலையில் 169 படமான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படம் இன்று வரை ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்று சொல்லலாம்.
Also read: அழகு நடிகைக்கு கொக்கி போட்ட ரஜினிகாந்த்.. தலைவரே நீங்களுமா இப்படி
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நக்மா ரகுவரன் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் அன்றே பட்டையைக் கிளப்பியது. தேவாவின் இசையுடன் பாஷா பாஷா என ரஜினிகாந்த் படிக்கட்டில் இறங்கிவரும் அந்த நடை இன்று வரை இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கிறது.
கமல்ஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பல நவரசங்களையும் காண்பித்தவர். நடிப்பையும் தாண்டி நடனம், இயக்கம் தயாரிப்பு என தனது திறமைகளை 2கே கிட்ஸ் வரை காண்பித்து வருகிறார். அப்படி உலகநாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் இன்றுவரை அவரது சிறந்த படமாக பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் ஆஸ்கார் வரை சென்று தேர்வாகி இந்தியாவிற்கே பெருமை சேர்த்தது என்று சொல்லலாம்.
Also read: வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்
விஜய்: இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியான கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜயின் நடிப்பு விஜயை பிடிக்காதவர்கள் கூட ரசித்துப் பார்க்கும் ஒரு திரைப்படமாக அமைந்தது என்று சொல்லலாம். தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தின் ரீமேக்கில் விஜய் நடித்திருப்பார்.ஆனால் மகேஷ்பாபுவை விட சிறந்த நடிப்பை விஜய் வெளிப்படுத்தினார் என தெலுங்கு மக்களே பாராட்டிய திரைப்படம்தான் கில்லி திரைப்படம்.
அஜித்: இயக்குனர் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த அஜித், வாய் பேச முடியாத ஊமையாக நடித்த கதாபாத்திரத்தை இன்றுவரை ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரமாக மறக்கவே முடியாது. அந்த கதாபாத்திரம்,மற்றொரு பேசும் அஜித் கதாபாத்திரத்தை விட சிறந்ததாக அத்திரைப்படத்தில் அவர் வில்லனிசத்தோடுஅஜித், நடித்திருப்பார்.
Also read: சன் பிக்சர்ஸ்கே கட்டளை போட்ட ரஜினிகாந்த்.. இதெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க