சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிகர்கள் வெறித்தனமாக பேசிய 8 எமோஷனல் வசனங்கள்.. காமெடியாக மாறிய பரிதாபம்!

பொதுவாக நாம் ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்றால் அதில் பல காட்சிகளும், சம்பவங்களும் நம் மனதை கவரும் வகையில் இருக்கும். அதிலும் அந்த காட்சிகளில் நடிகர்கள் பேசிய வசனங்கள் நம்மை புல்லரிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.

இப்படி நடிகர்கள் உயிரை கொடுத்து எமோஷனலாக பேசிய வசனங்கள் பின்னால் பயங்கர காமெடியாக மாறிய பரிதாபமும் உண்டு. அப்படிப்பட்ட சில உணர்ச்சிப்பூர்வ வசனங்களை பற்றி இங்கு காண்போம்.

உள்ளே போ பாட்ஷா படத்தில் இடம்பெறும் பேமஸ் டயலாக் இது. இதை ரஜினி தன் தம்பியை பார்த்து அதட்டலாக கூறுவார். அவரின் அந்த உறுமல் பேச்சை கேட்டு அவருடைய தம்பி பயந்து உள்ளே ஓடுவார். இப்படி அதிரடியாக எடுக்கப்பட்ட இந்த வசனம் தற்போது பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

நீங்க நல்லவரா கெட்டவரா நாயகன் படத்தில் நடிகர் கமல்ஹாசனை பார்த்து அவருடைய பேரகுழந்தை கேட்கும் கேள்வி இது. இந்தக் கேள்விக்கு கமல் தன்னுடைய முகத்தில் பல விதமான எக்ஸ்பிரஷன்களை கொடுத்து அசத்துவார். அப்போது பலராலும் ரசிக்கப்பட்ட இந்த வசனம் தற்போது காமெடியாக மாறியுள்ளது.

உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு தேவர் மகன் திரைப்படத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் கமலும் நாசரும் பேசிக்கொள்ளும் வசனம் இது. இது இப்ப பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

என்ன கொடுமை சரவணன் இது சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற பேமஸ் டயலாக். இதை பிரபு ரொம்பவும் எமோஷனலாக தன் மனைவியை நினைத்து ரஜினியிடம் கூறுவார். இது தற்போது காமெடியாக மாறி இருக்கிறது.

சந்தைக்கு போனும் ஆத்தா வையும் காசு குடு 16 வயதினிலே திரைப்படத்தில் சப்பானியாக நடித்திருக்கும் கமல்ஹாசன், ரஜினியிடம் இப்படி பேசுவார். ரொம்பவும் உணர்ச்சிப்பூர்வமாக அவர் பேசிய இந்த வசனம் தற்போது காமெடி வசனமாக மாறிவிட்டது.

சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் முதல் மரியாதை திரைப்படத்தில் தன் மகளை பறிகொடுத்த பெரியவர் சிவாஜியை பார்த்து கேட்கும் வசனம் இது. இந்தக் காட்சியில் அவர்கள் இருவரும் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்கள். இந்த வசனமும் இப்போது காமெடியாக மாறிவிட்டது.

ரத்த ரத்தமா வாந்தி எடுத்தேன் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகர் சண்முகசுந்தரம் தன் அக்கா காந்திமதியை பார்த்து நா தழுதழுக்க எமோஷனலாக இந்த வசனத்தை கூறுவார். மிகவும் பரிதாபமாக இருக்கும் இந்த வசனமும் தற்போது காமெடியாக மாறிவிட்டது.

நட்புன்னா என்னன்னு தெரியுமா தேவான்னா யாருன்னு தெரியுமா தளபதி திரைப்படத்தில் மம்முட்டி, ரஜினி இருவருக்கும் இடையே நடக்கும் மிகவும் எமோஷனலான காட்சியில் இந்த வசனம் இடம்பெறும். இந்த வசனம் தற்போது பல காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வருகிறது.

ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட்டுடா சிங்கம் படத்தில் நடிகர் சூர்யா மிகவும் வெறித்தனமாக இந்த வசனத்தை பேசுவார். இந்த வசனத்திற்கு பிறகு ஒரு அதிரடியான சண்டைக் காட்சியும் இருக்கும். அப்படி அவர் மிரட்டலாக பேசிய அந்த வசனம் இப்போது காமெடியாக மாறிவிட்டது.

Trending News