வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

தமிழ் சினிமாவின் முதல் பார்ட் 2 படம் எதுன்னு தெரியுமா?. பிள்ளையார் சுழி போட்டது கமல் தானா?

Kamal Haasan: சினிமாவில் தற்போது பார்ட் 2 படங்கள் பெரிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் உடனே அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து விடுகிறார்கள்.

சில நேரங்களில், ஒரு வேலை படம் ஹிட் ஆகிவிட்டால் இரண்டாம் பாகத்தை ரெடி பண்ணி விடலாம் என படத்தை ஒரு ட்விஸ்ட் உடன் முடிக்கிறார்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் பார்ட் 2 படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. பொன்னியின் செல்வன் 2, மாரி 2, எந்திரன்2, இந்தியன்2 என எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

ஆனால் பாகுபலி2, கே ஜி எஃப்2, புஷ்பா2 போன்ற படங்கள்தான் இதுவரை பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.

சூர்யா நடித்த சிங்கம் படத்தை பொறுத்த வரைக்கும் முதல் இரண்டு பாகங்கள் ஓகே தான் மூன்றாம் பாகத்தை இயக்குனர் ஹரி தவிர்த்து இருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதேபோன்று பெரிய அளவில் ஹிட் அடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து இருக்கவே கூடாது.

பிள்ளையார் சுழி போட்டது கமல் தானா?

இப்போது இந்த இரண்டாம் பாகங்கள் பெரிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதை முதன் முதலில் தமிழ் சினிமாவின் முயற்சி செய்து பார்த்ததே நடிகர் கமலஹாசன் தான்.

கமலஹாசன் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் கல்யாணராமன்.

இந்த படத்தில் ஒரு கமலஹாசன் இறந்து, அவருடைய ஆவி இன்னொரு கமலஹாசனுக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்ய உதவுவது போல் காட்டப்பட்டிருக்கும்.

அதன் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீதேவி இறந்து விடுவது போலவும் இருவருக்கும் ஒரு மகன் இருப்பது போலவும் காட்டப்பட்டிருக்கும்.

கமலுக்கு ஜோடியாக ராதா வருவார். ஒரு கமலுக்கு பிரச்சனை வரும் பொழுது இறந்து போன மற்றொரு கமலின் ஆவி வந்து உதவுவது போல் இரண்டாம் பாகம் அமைக்கப்பட்டது.

ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பின்னர் கமலஹாசன் விஸ்வரூபம் மற்றும் இந்தியன் படங்களின் இரண்டாம் பாகங்கள் நடித்தார்.

இந்த படங்களும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Trending News