சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காமெடி நடிகர்களுக்கு பஞ்சத்தில் அடிபட்ட தமிழ் சினிமா.. டாப்ல இருந்த ரெண்டு பேரும் ஹீரோவான சோகம்

தமிழ் சினிமாவில் 80, 90களில் காமெடி திரை உலகின் ஜாம்பவான்களாக இருந்த கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நீண்ட வருடங்களாக காமெடியன்களாகவே பல படங்களில் கலக்கிக்கொண்டிருந்தனர். அதன்பிறகு வயது முதிர்ச்சியின் காரணமாகவே அவர்கள் இளம் காமெடியன்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு திரையில் இருந்து மறைந்தனர்.

அதன் பின் 2k கிட்ஸ்களின் ஃபேவரிட் நகைச்சுவை நடிகர்களாக இருப்பவர்கள் தற்போது வரிசையாக கதாநாயகனாக நடிக்க கிளம்புவிட்டனர். இதனால் தமிழ் சினிமா தற்சமயம், காமெடி நடிகர்களுக்கு பஞ்சத்தில் அடிபட்டது போல் ஆனது. முதலில் சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக படங்களில் என்ட்ரி கொடுத்து, பின் காமெடியனாக நடிப்பதை சுத்தமாகவே தவிர்த்து வருகிறார்.

Also Read: டபுள் ஹீரோயின் படத்தில் நடிக்கும் லவ் டுடே பிரதீப்.. சிவகார்த்திகேயன், விஜய் நடிகைகளுக்காக பிடித்த அடம்

அது பத்தாது என்று கடந்த வருடம் டாப் 5 காமெடி நடிகர்களாக இருந்தவர்களுள் இரண்டு பேர் இப்போது ஹீரோவான சோகம் அரங்கேறி உள்ளது. இதனால் மீதி இருக்கும் ஓரிரண்டு பேரை வைத்து தான் ஒப்பேத்துகின்றனர். 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் சிறந்த காமெடி நடிகராக நடித்த சூரி இப்போது வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தின் வெறித்தனமான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதை பார்த்த பிறகு நிச்சயம் இனி சூரி காமெடி நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்.

Also Read: இதுவரை பட்ட அவமானங்களை சவாலாக மாற்றிய சூரி.. மனைவியவே வியக்க வைத்த செயல்

அதேபோல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே படத்தில் நடித்த காமெடி நடிகர் யோகி பாபுவும் அடுத்தடுத்து கதாநாயகனாகவே நடிப்பதற்கு ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த பொம்மை நாயகி என்ற படம் வெளியானது. இப்போது இவர் காமெடியனாக நடிப்பதற்கு வரக்கூடிய வாய்ப்புகளை நிராகரித்து, கதாநாயகனாக நடிக்க கூடிய படங்களின் கதைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படி யோகி பாபு மற்றும் சூரி இருவரும் ஹீரோவாக நடிக்கக்கூடிய படங்களில் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால், டான் படத்தில் நடித்த காமெடி நடிகர் பாலசரவணன் மற்றும் பீஸ்ட் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்த விடிவி கணேஷ், முதல் நீ முடிவும் நீ படத்தில் நடித்த இளம் காமெடியன் ஹரிஷ் உள்ளிட்டோர் தான் தற்சமயம் தமிழ் சினிமாவில் இருக்கும் நகைச்சுவை நடிகர்களாக இருக்கின்றனர்.

Also Read: அடுத்தடுத்து சூரிக்கு வரும் கதாநாயகன் வாய்ப்புகள்.. விடுதலைப் படத்தைத் தொடர்ந்து இனி முழு நேர ஹீரோ

Trending News