ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிசிறு தட்டாமல் 4 கதைகளையும் இணைத்த 7 படங்கள்.. அதிலும் விஜய் சேதுபதி அல்டிமேட்

ஒரு மிகப்பெரிய நிகழ்வுக்கு அடித்தளமானது ஒரு சிறிய விஷயமாக இருக்கும். வேறு எங்கேயும் நடந்த அந்த சிறு விஷயம் ஒரு பூதாகாரமாக வெடிக்கும். இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒருவருடைய நிகழ்வில் இன்னொருவர் பாதிக்க படும்படி எடுக்கப்படும் படம் பட்டர்ஃப்ளை எஃபெக்ட். அந்த மாதிரி பட்டர்ஃப்ளை எஃபெக்ட் இல் வெளியான படங்களை பார்க்கலாம்.

வானம்: சிம்பு, அனுஷ்கா, பரத், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான திரைப்படம் வானம். இதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு லட்சியத்துடனும், தேவைகளுடனும் உள்ளார்கள். வெவ்வேறு இடங்களில் உள்ள இவர்கள் அனைவரையும் சில பிரச்சனையால் ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள்.

சூப்பர் டீலக்ஸ்: விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார். இப்படத்தில் சில கதாபாத்திரங்களின் தனித்தனி கதை எப்படி ஒன்று சேருகிறது என்பதை சூப்பர் டீலக்ஸ்.

ஆயுத எழுத்து: மணிரத்தினம் இயக்கத்தில் சூர்யா, சித்தார்த், மாதவன், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், ஈஷா தியோல் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயுத எழுத்து. வெவ்வேறு பிரச்சனைகள், லட்சியங்கள், இலக்கங்கள் கொண்ட மூன்று இளைஞர்களை அரசியல் எப்படி இணைகிறது என்பதே ஆயுத எழுத்து.

நேரம்: நிவின் பாலி, நஸ்ரியா, நாசர், சிம்ஹா, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நேரம். ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் வெற்றி கதாபாத்திரத்தில் நிவின்பாலி நடித்திருந்தார். இவருக்கு ஏற்படும் நிதி நெருக்கடியால் வட்டி தொழில் செய்யும் சிம்ஹா இடம் பணம் பெறுகிறார். வெற்றியின் காதலியாக வேணி கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடித்து இருந்தார். பல சிக்கலில் மாட்டி இருக்கும் வெற்றி கடைசி நேரத்தில் தப்பித்தாரா என்பதே நேரம்.

மாநகரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சந்தீப் கிருஷ்ணன், ரெஜினா, ஸ்ரீ, சார்லி, ராம்தாஸ், மதுசூதன், ரவி வெங்கட், அருண் அலெக்சான்டர், தீனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ரெஜினாவை காதலிக்கும் சந்தீப், ரெஜினாவின் தோழி இன் சிபாரிசில் வேலைக்கு வரும் ஸ்ரீ. மூன்று வெவ்வேறு வித பிரச்சனைகள் மாற்றிக்கொள்ளும் ஸ்ரீ கடைசியில் தப்பித்தாரா என்பது மாநகரம்.

ஆரண்யகாண்டம்: ஜாக்கி செராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஸ்மின் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆரணிய காண்டம். தியாகராஜான் குமாரராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஒரு கேங்ஸ்டர் குரூப்பில் நடக்கின்ற சிலந்தி வலை பின்னல்களே ஆரண்யகாண்டம்.

தசாவதாரம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் கமல் பத்து வித்யாசமான வேடங்களில் நடித்திருந்தார். கமலின் ஒவ்வொரு அவதாரத்திற்கும் பேச்சு, பாவனையில் வித்தியாசம் காட்டியிருப்பார். 2004 ஆம் ஆண்டு பாக்சிங் டே சுனாமியில் தென்னிந்தியாவில் 12 ஆம் நூற்றாண்டின் நிகழ்வு எவ்வாறு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தியது ஆராய்ச்சி விஞ்ஞானி கோவிந்த் கதாபாத்திரத்தில் கமல் கூறியிருப்பார்.

Trending News