சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

ஆஸ்கருக்கு சென்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த முதல் 5 படங்கள்.. சிவாஜி, கமலால் கிடைத்த கெளரவம்

உலக சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் ஆஸ்கர் விருது என்பது ஒரு மிகப்பெரிய கனவு. எத்தனை திறமையானவர்களாக இருந்தாலும் அவர்கள் அதிகம் எதிர்பார்ப்பது ஆஸ்கர் மேடையாக தான் இருக்கும். சினிமாவை சேர்ந்த பல்வேறு துறைகளுக்கு, குறும்படங்களுக்கும் கூட ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது. சிறந்த படம் என்ற கேட்டகிரியில் பிராந்திய மொழிகளுக்கு வழங்கப்படுகிறது.

கோலிவுடை பொறுத்த மட்டும் ஆஸ்கர் விருது என்பது இன்னும் எட்டாத கனி தான். ஒரு சில தமிழ் படங்கள் ஆஸ்கர் விளிம்பு வரை சென்று திரும்பி இருக்கிறது. ஒரு சில படங்கள் ஆஸ்கரை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டாலும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஆஸ்கர் தேர்வு வரை சென்று நழுவி விடுகிறது.

Also Read: 500 கோடி கொட்டியும் செலக்ட் ஆகாத ஆர்ஆர்ஆர்.. ஆஸ்காருக்கு தேர்வான ஒரே மினி பட்ஜெட் இந்தியன் மூவி

தெய்வமகன்: 1969ஆம் ஆண்டு இயக்குனர் திருலோகசந்தர் இயக்கத்தில், சிவாஜி கணேசன் தயாரிப்பில் ரிலீசான தெய்வமகன் திரைப்படம் தான் தமிழில் முதன் முதலில் ஆஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த படத்தில் சிவாஜி மூன்று கேரக்டரில் நடித்திருப்பார். எந்த டெக்னாலஜியும் இல்லாத காலத்திலேயே 3 கேரக்டரையும் சிங்கிள் பிரேமில் காட்டியிருப்பார்கள்.

நாயகன்: 1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில், கமல் நடித்த நாயகன் திரைப்படம் தான் முதன் முதலில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலின் திரைப்படம் ஆகும். இந்த படம் மும்பை தாதாவான வரதராஜன் முதலியாரின் வாழ்க்கை திரைப்படம் ஆகும். டைம் வார இதழ் மற்றும் சிஎன்என்-ஐபிஎன் நிறுவனம் உலகின் சிறந்த 100 படங்களில் இந்த படத்தையும் சேர்ந்திருந்தது.

Also Read: கமலின் நிறைவேறாத 2 ஆசைகள்.. திறமைக்கு எங்கப்பா இங்க மதிப்பு இருக்கு

அஞ்சலி: குழந்தைகளின் வாழ்க்கையை மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட மணிரத்தினத்தின் இந்த அஞ்சலி படம் மூன்று தேசிய விருதுகளை வென்று இருந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு ஆகியோர் நடித்திருந்தனர்.

தேவர் மகன்: தேவர் மகன், நடிகர் கமலஹாசனால் ஏழு நாளில் கதை, திரைக்கதை எழுதி முடிக்கப்பட்ட திரைப்படம் ஆகும். சிவாஜி மற்றும் கமல் அப்பா மகனாக நடித்திருந்தார்கள். 1992 ஆம் ஆண்டு ரிலீசான இந்த திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

குருதிப்புனல்: 1995 ஆம் ஆண்டு பி சி ஸ்ரீராம் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் இந்த படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் கமல்ஹாசன், அர்ஜுன், கௌதமி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். பாடல்களே இல்லாமல் வெளியான இந்த படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Also Read: சூர்யா, ஜோதிகாவை தொடர்ந்து உதயநிதிக்கும் ஆஸ்கர் விருது.. எந்தப் பிரிவில் தெரியுமா?

Trending News