சமீபத்தில் ஓடிடிக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் போர் கொடி தூக்கி வருகிறது. ஏற்கனவே படங்கள் நேராக ஓடிடியில் ரிலீஸ் ஆவது தியேட்டர் ஓனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் பிடிக்கவில்லை. இந்த பஞ்சாயத்து இவர்களுக்குள் 4 வருடங்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
எந்த படத்தை எப்பொழுது ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும், அதேபோல் எந்தெந்த ஹீரோக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பிரச்சனை பல காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் ஹீரோக்களை ஏ பி என இரு பிரிவுகளாக பிரித்துள்ளது.
பொதுவாக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் தான் முதல் தகுதியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது, இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல அதிரடி நடவடிக்கைகளை தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் எடுத்து வருகின்றனர்.
ஒரு படம் ரிலீஸ் ஆகிவிட்டால் 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிடலாம் . ஆனால் படங்கள் தியேட்டரில் ஓடாவிட்டால் இதற்கு ஈடு கட்டும் விதமாக இப்பொழுது பல திட்டங்களை தீட்டி உள்ளது தயாரிப்பாளர் சங்கம். அதாவது யார் படத்தை 8 வாரங்களில் ஓடிடிக்கு கொடுப்பது, யார் படத்தை 6 வாரங்களில் கொடுப்பது, யார் படத்தை உடனே கொடுப்பது என முடிவெடுத்துள்ளனர்.
சிலம்பத்தை தூக்க ரெடியான டிஆர்
இப்பொழுது, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம்,தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஏ கிரேடு நடிகர்களாக பிரித்துள்ளனர். ஜெயம் ரவி கார்த்தி, சிம்பு, ஜீவா, விஜய் சேதுபதி, அருண் விஜய் போன்றவர்கள் பி கிரேடில் வருகின்றனர்.
ஏ கிரேடு ஹீரோக்கள் படம் 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் பார்க்கலாம் அதைப்போல் பி கிரேடு ஹீரோக்கள் படங்கள் 6 வாரங்களிலும், இந்த கிரேடு லிஸ்டில் இல்லாத ஹீரோக்கள் படங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் ஓடிடியில் வெளியிடலாம் என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுக்கள் அனைத்தும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை வந்தால் சிம்புவை பி கிரேடில் போட்டதற்கு சிலம்பத்தை தூக்கி விடுவார் டி ஆர்.