செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சுட சுட ரெடியான ஐந்து பார்ட்-2 படங்கள்.. வான்டடா நான் நடிக்கணும்னு எஸ் ஜே சூர்யா போட்ட போடு

பொதுவாக சினிமாவில் ரிலீசாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு படாத பாடு படும். அதுவே சிலருக்கு அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டுவது போல மாபெரும் பிரம்மாண்ட ஹிட் திரைப்படமாக அமையும். பிறகு அதன் தொடர்ச்சியாக பாகங்களை எடுக்க முன்வந்து, படபிடிப்பும் தொடங்குவார்கள். அந்த வரிசையில் தற்போது ஏற்க்கனவே வெற்றி பெற்ற 5 படங்களின் பார்ட் 2 தயாராகி கொண்டிருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம்.

மரகத நாணயம் 2: 2017 ஆம் ஆண்டு ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஸ்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மரகத நாணயம். இந்த படத்தை ஏ ஆர் கே சரவணன் இயக்கி, டில்லி பாபு தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது மரகத நாணயம் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குனர் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.அதை கேட்டதும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதையும் டில்லிபாபுவே தயாரிக்க உள்ளார்.

Also Read:பத்து பைசா கூட மூளையை செலவழிக்காத இறைவன் படக்குழு.. மொத்தமாக டேமேஜ் செய்த ப்ளூ சட்டை

பிசாசு 2: மிஷ்கின் இயக்கத்தில் 2014ல் ஹாரர் திரைப்படமாக வெளிவந்தது பிசாசு. நாகா, ராதா ரவி, ராஜ்குமார், பிச்சுமணி இன்னும் பல நடித்திருந்தனர். பேயை கூட தேவதையாக மிஷ்கின் இந்த படத்தில் காட்டினர்.அது நல்ல வரவேற்பை பெற்றது. மிஷ்கின் மீண்டும் பிசாசு பார்ட் 2 விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி கூட்டணியில் இயக்குகிறார்.

ஜென்டில்மேன் 2: சங்கர் இயக்கத்தில், கே டி குஞ்சுமோன் தயாரித்து 1993ஆம் வருடம் வந்த படம் ஜென்டில்மேன். இதில் அர்ஜுன் ஆக்சன் ஹீரோவாக நடித்து இருப்பார். படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, 27 வருடம் கழித்து ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை மீண்டும் கே டி குஞ்சுமோன் தயாரிக்கிறார். கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் ப்ரியலால் இன்னும் பலர் நடித்து, கீரவாணி இசையமைப்பது படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது.

Also Read:11 முறை ரீ டேக் முத்தத்தால் சூடான ஹீரோ, ஹீரோயின்.. பூகம்பம் வந்ததைப் போல் ஓவராய் குலுங்கிய கேரவன்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா , லட்சுமிமேனன் பட்டைய கிளப்பிய திரைப்படம் ஜிகர்தண்டா.இப்பொழுது ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் திரைப்படத்தை தற்போது ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா கூட்டணில் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இதில் பாபி சிம்ஹா இடம்பெறவில்லை, அவர் வேணா என்னை ஆள விடுங்கள் என சிதறி ஓடினார்.அதுமட்டுமின்றி எஸ் ஜே சூர்யா இந்த படத்தின் கதையை கேட்டவுடன் நான் தான் நடிப்பேன் என கார்த்திக் சுப்பு ராஜ் இடம் ஆர்டர் போட்டு விட்டாராம்.

இந்தியன் 2: சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து 1996 இல் வெளிவந்தது இந்தியன். பயங்கர ஹிட் அடித்தது, அதன் தொடர்ச்சியாக இந்தியன் பார்ட் 2 வை சங்கர் இயற்றியுள்ளார். இதில் கமலுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், இன்னும் எக்கச்சக்க முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து உள்ளனர். இதற்கு ரசிகர்கள் இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது, கொரோனா காரணமாக சில தாமதம் ஏற்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது இந்த படம்.

Also Read:இமேஜ் பார்க்காமல், லேடி கெட்டப் போட்டு ஹிட்டான 5 படங்கள்.. ஷில்பாவை யாராலும் மிஞ்ச முடியாது

Trending News