ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயத்தை போட்டுடைத்த 7 படங்கள்.. கதறி அழ வைத்த கமல்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவாரசியமான சினிமா செய்திகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் சிறுவர், சிறுமியரை துன்புறுத்திய, தவறாக சித்தரித்த திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

அச்சமுண்டு அச்சமுண்டு: பிரசன்னா, சினேகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்தை இயக்கி இருந்தார் அமெரிக்கா வாழ் தமிழரான அருண் வைத்தியநாதன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இந்தியத் தம்பதில்களின் குழந்தைகயை கேவலமாக துன்புறுத்திய முற்படும் கதாபாத்திரத்தில் அமெரிக்க பெயிண்டர் ஒருவர் வருகிறார். அவர்களிடம் இருந்து எப்படி மகளை மீட்டனர் என்பதை கூறி இருந்தார்கள். நிச்சயம் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் பார்க்கவேண்டிய திரைப்படம்.

காதல் கொண்டேன்: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் இணைந்து நடித்த இந்த படத்தில், சிறுவயதில் குழந்தைகள் காப்பகத்தில் வளர்ந்த தனுஷுக்கு அங்கு நடக்கும் கேவலமான துன்புறுத்தல், அத்துமீறல்கள் மனச்சிதைவை உண்டாக்குகிறது. அதனால் அன்பிற்கு ஏங்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார். பெண் தோழியின் நட்பை காதல் என்று எண்ணி இவர் செய்யும் அசாத்தியங்கள் தான் படமே. நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

குட்டி (2001): குட்டி என்றொரு திரைப்படம் ஜானகி என்னும் பெண் இயக்குனரால் இயக்கப்பட்டு, இளையராஜா இசையமைத்து வெளிவந்தது. ஸ்வீதா, கௌசல்யா, நாசர், விவேக் மற்றும் பலர் நடித்த இந்த படத்தில், வறுமை காரணமாக குழந்தையை வீட்டு வேளைக்கு அனுப்புமிடத்தில் அவள் அனுபவிக்கும் கொடுமைகளை சிறப்பாக படம் பிடித்திருந்தனர். நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படைப்பு

மகாநதி: கமல்ஹாசன், சுகன்யா, எஸ்.என்.லட்சுமி, ஷோபனா ஆகியோர் நடித்த இந்த படத்தை சந்தன பாரதி இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு இசை, இளையராஜா. சென்னைக்கு வரும் நாயகனை வஞ்சகமாக ஏமாற்றி, அவன் குடும்பத்தை பிரித்து, ஜெயிலுக்கு அனுப்பி, இளம் வயது மகளை விபச்சார விடுதியில் விற்று விடுகிறான் வில்லன். அவனை பழிவாங்கினாரா அந்த அப்பா என்பதை ரத்தம் தெறிக்க கூறி இருந்தனர். நிச்சயம் கனத்த மனது படைத்தவர்களுக்கான படம்.

ராட்சசன்: விஷ்ணு, அமலாபால், அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்தை இயக்கி இருந்தார் ராம்குமார். இந்த படத்தில் பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளை தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் பற்றியது. இந்த படத்தில் மாணவிகளிடம் தவறாக நடக்கும் வாத்தியாராக ஒரு கதாபாத்திரம் படைக்க பட்டிருக்கும். அதை பார்க்கும் நமக்கே நெஞ்சு பதைபதைக்கும். நிச்சயம் இளகிய மனம் கொண்டவர்களுக்கான படம் இதுவல்ல.

மாஸ்டர்: சமீபத்தில் வந்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்த இந்த படத்தில், சிறார்களை தவறான வகையில் உபயோகிக்கும் வில்லன்களை பற்றியது. இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி, தான் செய்யும் தவறுகளுக்கு அப்பாவி சிறுவர்களை சிறைக்கு அனுப்பி குற்றத்தை ஏற்க வைப்பார். இதனை தடுத்து நிறுத்தும் நாயகனாக விஜய் நடித்திருப்பார். மாபெரும் வெற்றி பெற்றது இந்த திரைப்படம்.

சூழல்: புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த சுழல் வெப் சீரீஸ் ரசிகர் மத்தியில் இன்றளவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே சொந்த பந்தங்களால் ஏற்படும் பா**யல் தொல்லையில் இருந்து எப்படி காப்பாற்றப்படுகின்றன என்பதுதான் கதை. இதை 8 எபிசோட் ஆக வெளியிட்டு ரசிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய படமாகப் பார்க்கப்பட்டது.

Trending News