தமிழ் சினிமாவில் பெருமை படுத்தக்கூடிய வகையில் பல படங்கள் உள்ளன. ஆனால் அந்த படங்களில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் முன்னணி நடிகர் நடித்தால் மட்டுமே இந்த படத்திற்கான வரவேற்பு மதிப்பும் கிடைக்கும்.
ஆனால் ஒரு சிலர் புதுமுக நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து படங்களை இயக்கியதால் கதை நல்லா இருந்தும் ரசிகர்களுக்கு தெரியாத முகம் என்பதால் படம் தோல்வி அடைந்துவிடும். அந்த மாதிரி கதை நன்றாக இருந்தும் தமிழ் சினிமாவில் மதிக்கப்படாத படங்களைப் பற்றி பார்ப்போம்.
அரண்: எல்லையை பாதுகாக்கும் வீரர்கள் படும் கஷ்டத்தை மையமாக வைத்து அரண் படத்தை இயக்கியிருப்பார்கள். அதிலும் குறிப்பாக காஷ்மீர் மக்கள் பயந்து பயந்து வாழும் வாழ்க்கையை தத்ரூபமாக படத்தில் காட்டியிருப்பார்கள். ஆனால் கடைசியில் ஜீவா இறந்துவிடுவார் படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.
குக்கூ: நடிகர் தினேஷ் குக்கூ படத்தில் கண்ணு தெரியாததுபோல் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக கதாநாயகி மாளவிகா நாயர் கண்ணு தெரியாமல் நடித்திருப்பார். ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்ப்பை பெற்றாலும் மிகப்பெரிய அளவில் படம் வெற்றி பெறவில்லை.
இருவர்: இருவர் படத்தில் எம்ஜிஆர் மற்றும் கலைஞர் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள். இந்த படம் சரியாக புரோமோஷன் செய்யாததால் மக்களிடம் இப்படம் சரியாக போய் சென்றடையவில்லை. அதனால் இப்படம் தோல்வியடைந்தது.
தென்னவன்: தென்னவன் படத்தில் விஜயகாந்த் ஒரு தேர்தல் அதிகாரியாக நடித்திருப்பார் அதிலும் தேர்தலுக்காக இவர் 5 கட்டுப்பாட்டு விதிகளை கூறுவார். அதாவது, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதியில் நிற்க கூடாது. இடைத்தேர்தலில் பதவியில்யிருக்கும் யாரும் கேன்வாஸில் பண்ணக்கூடாது. அனைவரும் ஓட்டு போட வேண்டும் இல்லை என்றால் கேஸ், கேபிள் மற்றும் ரேஷன் கார்டு எல்லாம் கட் செய்யப்படும்.
கொலை மற்றும் கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கினால் தேர்தலில் நிற்கக் கூடாது. ரீகால் முறையில் எம்எல்ஏ சரியாக சேவை செய்யாவிட்டால் பதவி விலக செய்யலாம் போன்ற ஐந்து விதிமுறைகளை கூறியிருப்பார். இந்த விதிகள் படங்களில் வெளிவந்த பொழுது பரவலாக பேசப்பட்டாலும் பெரிய அளவில் மக்களிடம் வெற்றி பெறவில்லை.
மகாநதி: சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மகாநதி. இப்படம் கிரைம் மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும், விருது ரீதியாகவும் பல பாராட்டுகளைப் பெற்றது.
இப்படத்திற்காக சிறந்த எதிர்கால படத்திற்கான தேசிய விருது மற்றும் பெஸ்ட் ஆடியோ கிராஃப் போன்ற பல விருதுகளை பெற்றது. படத்தின் கதை நன்றாகயிருந்தாலும் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையாமல் தடுமாறியது.
அன்பே சிவம்: சுந்தர்சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பே சிவம். இப்படம் மனிதநேயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகள் இன்றுவரை ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
ஆனால் படம் வெளியான காலத்தில் படத்தின் அருமையை பற்றி பல ரசிகர்களுக்கும் தெரியாமல் போனதால் இப்படம் அப்போது வசூல் ரீதியாக சற்று தோல்வியடைந்தது. ஆனால் படம் வெளியாகி ஒரு சில வருடங்கள் கழித்து இப்படிப்பட்ட சிறப்பான கதை அம்சம் கொண்ட படத்தை மிஸ் செய்துவிட்டோமே என பல ரசிகர்கள் ஏங்கும் அளவிற்கு இப்படம் பிற்காலத்தில் வெற்றி பெற்றது.
கன்னத்தில் முத்தமிட்டாள்: மணிரத்தினம் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் கன்னத்தில் முத்தமிட்டாள். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைக்க தவறியது.
இறைவி: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் இறைவி. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு இருந்தது. என்னதான் விமர்சன ரீதியாக வரவேற்பு இருந்தாலும் படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் வசூல் தான் அப்படிப் பார்க்கும்போது இப்படம் தோல்வியடைந்தது.
பேரன்பு: ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் பேரன்பு. இப்படம் வெளிவந்த பொழுது பலரும் இப்படத்தின் கதையும் படத்தில் நடித்த பலரையும் பாராட்டினர். விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக இப்படம் தோல்வியடைந்தது.
என்னை தெரியுமா: என்னை தெரியுமா படத்தில் மோகன்பாபுவின் மகனான மஞ்சு மனோஜ் ஹீரோவாக நடித்திருப்பார். இப்படத்தில் தூங்கினாள் ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஆக எல்லாவற்றையும் மறந்து விடுவார். வித்தியாசமான கதையாகயிருந்தாலும் ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டை வாங்காமல் தோல்வியடைந்தது.
விநோதைய சித்தம்:
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வினோதய சித்தம். நாம் வாழும் வாழ்க்கையை மற்றவர்களுடன் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்தை வினோத சித்தம் படம் சொல்லியுள்ளது. நல்ல பெயர் வாங்கினாலும் சரியாக ஓடவில்லை.
இப்படி கதை நன்றாக இருந்தும் ரசிகர்கள் மத்தியில் பிளாப்பான படங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் இந்த 10 படங்கள் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
Also Read: கதை சூப்பரா இருந்தும் ஓடாத 10 படங்கள்.. கை தட்டியே கமலை 2 முறை கவுத்த ரசிகர்கள்