சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘தர்மன்’. இப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், தற்போது மற்றொரு முக்கியமான நடிகர் படக்குழுவுடன் இணைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மூத்த நடிகர் ராஜ்கிரண் இப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் ராஜ்கிரண். கிராமத்து பின்னணியைக் கொண்ட கேரக்டர்கள், குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைகள் எனப் பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.குறிப்பாக,ஹீரோவாக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். இவருடைய திரை அனுபவமும் நடிப்புத் திறனும் பல படங்களுக்குப் பலமாக அமைந்துள்ளன.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’படத்தில் ராஜ்கிரண் இணைந்திருப்பது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நடிகை நயன்தாரா, சிம்ரன் மற்றும் ராம் பொத்தினேனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ராஜ்கிரணும் இந்தக் கூட்டணியில் இணைந்திருப்பதால்,படத்தின் நட்சத்திரப் பட்டியல் மேலும் வலுப்பெற்றுள்ளது.
ரஜினிகாந்துடன் ராஜ்கிரண் இணைந்து நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் திரையில் எந்த மாதிரியான கேரக்டர்களில் தோன்றுவார்கள், அவர்களுக்கிடையேயான சீன்கள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. படத்தின் கேரக்டர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகாத நிலையில், ‘தர்மன்’படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.




