வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஜயகாந்த்-க்கு கிடைக்கப் போகும் உயர்ந்த கௌரவம்.. போராடி வரும் நடிகர்கள்

Vijayakanth is going to get the highest honor: ஒருவர் இருக்கும் பொழுது அருமை தெரியாது போன பிறகு தான் புரியும் என்று சொல்வார்கள். அதுதான் கேப்டன் விஜயகாந்த் விஷயத்தில் நடந்திருக்கிறது. அவர் இருக்கும் பொழுது அவரை கொண்டாடத் தவற விட்டு விட்டார்கள். ஆனால் தற்போது நம்முடன் இல்லை என்று நினைக்கும் பொழுது மனம் ஏற்க மறுக்கிறது. இவருடைய இறப்பிற்கு தமிழகமே கடலென திரண்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார்கள்.

ஆனால் சினிமாவிற்கு விஜயகாந்த் பண்ணிய விஷயங்கள் அனைத்துமே ஒரு பொக்கிஷம் ஆனது. இன்னும் சொல்லப் போனால் நடிகர் சங்கம் தற்போது ஒரு உயரத்தில் இருப்பதற்கு முக்கிய ஆணிவேராக இருந்தது கேப்டன் தான். அப்படிப்பட்ட இவருடைய இறப்பிற்கு சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை. எப்போதும் ஒரு விஷயம் சொல்வார்கள் நல்லதுக்கு போய் நிக்கிறமோ இல்லையோ கெட்டதுக்கு கண்டிப்பாக போய் நிற்க வேண்டும் என்று.

ஆனால் இந்த விஷயத்தில் தமிழ் சினிமா சரியாக விஜயகாந்த்-க்கு செய்ய வேண்டிய விஷயங்களை செய்ய தவறிவிட்டது. அதனால் தற்போது மக்களிடமிருந்து நல்ல பேரை வாங்குவதற்காகவோ அல்லது கண் துடைப்பிற்காகவோ ஏதோ ஒரு விஷயத்தை பண்ண வேண்டும் என்று முயற்சி எடுத்தார்கள். அந்த வகையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

Also read: கேப்டன் 80% சதவீத படங்களில் விட்டுக் கொடுக்காத ஒரே நடிகர்.. யாருக்கும் தெரியாத விஜயகாந்தின் மறுபக்கம்

இதில் விஜயகாந்தின் இரு மகன்கள் கலந்து கொண்டார்கள். அத்துடன் விஜயகாந்த் உடன் இணைந்து பணியாற்றிய பலரும் பங்கேற்றார்கள். இவர்களுடன் கமல், ஜெயம் ரவி, சிவா, ராதாரவி, ரமேஷ் கண்ணா, சிம்ரன், தேவயானி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். ஒவ்வொருவரும் விஜயகாந்த் உடன் ஏற்பட்ட அனுபவங்களை முன்வைத்து பேசினார்கள்.

அந்த வகையில் கமலும், விஜயகாந்த் பற்றி சில விஷயங்களை பேசினார். அதாவது ஆரம்பத்தில் விஜயகாந்த் பல அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்து உள்ளார். இந்த மாதிரி ஒரு அவமானங்களை வேறு யாரும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காகவே விஜயகாந்த் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சக நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்று அவரைப் பற்றி கமல் நினைவு கூர்ந்து பேசினார்.

அடுத்ததாக ஜெயம் ரவி பேசிய பொழுது, எல்லோரும் இறந்த பிறகு தான் கடவுளாக மாறுவார்கள். ஆனால் விஜயகாந்த் வாழும்போதே கடவுளாக இருந்திருக்கிறார். எனவே அவரை கௌரவிக்கும் விதமாக அவரைப் பற்றிய விஷயங்களை பள்ளி பாடப் புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்று சொல்லி சத்திரனுக்கு சாவே இல்லை என்பதை தெரிவித்தார். இவரை தொடர்ந்து மற்ற பிரபலங்களும் விஜயகாந்துக்கு இந்த உயர்ந்த கௌரவம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள். இவர்களுடைய கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம் ரெடி.. மீண்டும் திரையில் கேப்டன்

Trending News