திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விராட் கோலி உடம்பில் உள்ள 5 டாட்டூக்களும், அர்த்தங்களும்.. ஏக்கத்துடன் உயிரை விட்ட தந்தைக்கு கிங் கொடுத்த இடம்

விராட் கோலி உடம்பில் கிட்டத்தட்ட ஏகப்பட்ட பச்சைகளை குத்தி தோல் தெரியாத அளவிற்கு மறைத்துள்ளார். ஒவ்வொரு பச்சைகளுக்கும், கோலி ஒவ்வொரு அர்த்தத்தை சொல்கிறார் அப்படி எந்தெந்த பச்சை குத்தி இருக்கிறார் தந்தைக்காக அவர் என்ன பச்சை குத்தி இருக்கிறார், ஏன் அந்த பச்சை என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

ஓம் டாட்டூ: இது விராட் கோலியின் வலது தோள்பட்டையில் இந்த டாட்டூ போடப்பட்டிருக்கிறது. அவருக்கு கடவுள் நம்பிக்கை மிக மிக அதிகம். அந்த பச்சை குத்திய பிறகு நிறைய நல்ல விஷயங்கள் அவருக்கு நடந்ததாம்,. இதையே ஒரு பாசிட்டிவிட்டியாக எடுத்து இன்றுவரை அதற்கு மதிப்பு கொடுத்து வருகிறார்.

ஸ்கார்பியன்: இது தேள் உயிரினத்தின் ஆங்கில பெயர். இது அவருடைய ராசியை குறிக்கிறது. விராட் கோலி தனது இடது தோலில் இந்த பச்சைையை குத்தி இருக்கிறார். ராசி பலன் என்பதற்காக மட்டுமே இந்த பச்சையை குத்தி இருக்கிறார்.

Prem என்ற பெயர்: இது விராட் கோலியின் தந்தையின் பெயர். இதை கோலி தன் மார்பில் டாட்டூவாக போட்டிருக்கிறார். கோலியின் தந்தை எப்படியாவது அவர் இந்திய அணியில் இடம் பிடித்து விடுவார், அவரது ஆட்டத்தை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்திருக்கிறார். ஆனால் அதை பார்ப்பதற்கு முன்பு அவர் இறந்து விட்டார். PREM என்று அவரது பெயரைத்தான் நெஞ்சில் குத்தி இருக்கிறார்.

லார்ட் சிவன்: இதை தனது இடது தோள்பட்டைக்கு கீழ் பகுதியில் இந்த பச்சையை வரை படத்துடன் குத்தி இருக்கிறார். கைலாசாவில் உள்ள சிவன் கோயில் பக்தர் விராட் கோலி. அவர் மீது கொண்ட பக்தி மிகுதியால் தான் இந்த பச்சை.

சரோஜ் என்ற பெயர்:  கோலியின் இடது கைகளுக்கு மேல் சரோஜ் என்ற பெயர் குத்தி இருக்கிறார். இது விராட் கோலியின் தாயார் பெயர். இது போக 175, 269 என்ற தனது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொப்பியின் எண்களையும் பச்சையாக குத்தி இருக்கிறார்.

Trending News