ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

சுவாரசியம் குறைந்து காணாமல் போன 5 தொகுப்பாளினிகள்.. கிசுகிசுக்கப்பட்டதால் வெளியேறிய பிரபலம்

சின்னத்திரைக்கு என்றே சில முகங்கள் உள்ளது. அவர்கள் தனித்துவமான முறையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அவ்வாறு பிரபலமான பெண் தொகுப்பாளரை சின்னத்திரை இழந்துள்ளது. தற்போது அவர்கள் இல்லாத நிகழ்ச்சிகள் வெறுமையாகவே உள்ளது.

விஜே அஞ்சனா: அஞ்சனா சிரித்த முகமும் அழகிய பேச்சும் இவருக்கு என்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. ரொம்ப வருட காலங்கள் சன் மியூசிக்கில் இருந்த முக்கிய தொகுப்பாளினி அஞ்சனா. இவர்களுக்காகவே சன் மியூசிக் சேனலை பார்க்கும் இளைஞர்கள் அதிகம். இப்படியிருக்க பல வருடங்கள் கழித்து அவர் ஒரு சினிமா நடிகரை திருமணம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சியில் தோன்றுவதை தவிர்த்தார்.

குழந்தைகள் பெற்று சில வருடங்கள் கழித்து இப்போது இவர் தொகுப்பாளினி ஆகவேண்டும் என்ற எண்ணத்திலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது இவரது முயற்சி எடுபடவில்லை மக்கள் மறந்த வண்ணம் உள்ளன.

டிடி : டிடி விஜய் டிவியின் சொத்து என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்காவாசி நிகழ்ச்சிகளை டிடி தான் தொகுத்து வழங்கினார். ஜோடி நம்பர் 1,காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை டிடி தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது சில படங்களில் கவனம் செலுத்தி வரும் டிடி அவ்வப்போது மட்டும் விஜய் டிவியில் வந்து செல்கிறார்.

பாவனா : விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பாவனா. இந்நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு முன்னதாக இவர் ராஜ் தொலைக்காட்சியிலும் பணியாற்றியுள்ளார். மேலும் கிரிக்கெட், கபடி போன்ற நிகழ்ச்சிகளில் கமாண்டராக பணியாற்றியுள்ளார். தற்போது பாவனாவை சின்னத்திரைகளில் பார்க்க முடியவில்லை.

அர்ச்சனா : ஜெயா டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் அர்ச்சனா. அதன்பிறகு சன் டிவி, விஜய் டிவி என இவர் தொகுத்து வழங்காத சேனலே இல்லை என்று சொல்லலாம். அவ்வாறு பல சேனல்களில் தொகுத்து வழங்கி தனது முத்திரையைப் பதித்தவர் அர்ச்சனா. ஆனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தார்.

ஜாக்குலின்: KPY நிகழ்ச்சி மூலம் ரக்ஷன் உடன் சேர்ந்து ஜாக்குலின் பிரபலமானார். இதனால் இருவரையும் சேர்த்து வைத்து பல கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் ஜாக்குலின் ரசிகர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை தற்போது சின்னத்திரையில் இருந்து எந்த ஒரு போன் காலும் வருவதில்லையாம். இதனால் விஜய் டிவி ரசிகர்கள் ஜாக்குலின் இழந்தது சற்று வருத்தம்தான்.

Trending News