27 வயதில் மகன், 23 வயது இளம் பெண்ணுடன் திருமணம்.. ஷாக் கொடுத்த வாணி ராணி புகழ் பப்லு

சின்னத்திரையில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பல சீரியல்கள் நடித்து பிரபலமான 57 வயது நடிகர் தற்போது 23 இளம் பெண்ணை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட செய்தி தான். தற்போது ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அவருக்கே 27 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் தற்போது இவருக்கு திருமணம் தேவையா என பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் மறுபுறம் அது அவருடைய சொந்த வாழ்க்கை என சிலர் கூறுகின்றனர். அந்த நடிகர் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

சிவாஜி காலத்திலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு சில படங்களில் நடித்தவர் பப்லு பிரித்விராஜ். இவர் பெரும்பான்மையான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து சின்னத்திரை பக்கம் வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.

அதுவும் குறிப்பாக ராதிகா சரத்குமாரின் சின்னத்திரை தொடர்களில் பப்லு பிருத்திவிராஜ் கண்டிப்பாக இடம் பெறுவார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வருகிறார். பிரித்விராஜ் தனது உடற்பயிற்சி மூலம் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளக் கூடியவர்.

1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை பிரித்விராஜ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். ஆட்டிசம் குறைபாடு கொண்ட பப்லுவின் மகனுக்கு தற்போது 27 வயது ஆகிறது. இந்நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பப்லு மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

babloo
babloo

இந்த சூழலில் மலேசியாவைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு பிரித்திவிராஜ் திருமணம் செய்து கொண்டுள்ளார். 57 வயதுடைய பிருத்திவிராஜ் தன்னைவிட 34 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.