Actor Shri: பழைய சீரியல்களின் ஒட்டுமொத்த ஸ்டீரியோடைப்பினையும் மொத்தமாக மாற்றிய பெருமை விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு உண்டு.
90ஸ் கிட்ஸ்கள் கொண்டாடி தீர்த்த சீரியல்களில் முக்கியமான ஒன்று இந்த சீரியல். இதில் நடித்த பலருக்கும் அடுத்தடுத்து சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த அளவுக்கு அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்தது என்பது தான் நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ பற்றி வெளிவந்த செய்திகள் மூலம் மற்ற கனா காணும் காலம் சீரியலின் மூலம் ஹீரோவான நடிகர்களின் நிலைமை பற்றியும் தெரிய வந்திருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
4 ஹீரோக்கள் நிலைமை
இர்பான்: கனா காணும் காலங்கள் சீரியல் முதல் சீசன் மூலம் பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்தவர் தான் நடிகர் இர்பான். அதன் பின்னர் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பட்டாளம் மற்றும் மகாபலிபுரம் படங்களில் ஹீரோவாக நடித்த இவர் அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகவில்லை.
பாலாஜி: கனா காணும் காலங்கள் சீரியலில் ஜோ என்ற கேரக்டரில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் புகழடைந்தவர் நடிகர் பாலாஜி.
அதன் பின்னர் பட்டாளம் மற்றும் காதல் சொல்ல வந்தேன் படங்களில் நடித்தார். தற்போது இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவுமே இல்லை.
பாலா: 90ஸ் கிட்ஸ்களின் காதல் நாயகன் என்று கூட பாலாவை சொல்லலாம். கனா காணும் காலங்கள் சீரியலில் ஹீரோவாக நடித்த இவர் தொடர்ந்து ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து சில எபிசோடுகள் முடிந்த பிறகு அதிலிருந்து விலகிக் கொண்டார். சினிமாவில் தொடர்ந்து முயற்சி செய்த இவருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.
பாண்டி: கனா காணும் காலங்கள் சீரியலில் காமெடியில் பேர் போனவர் பிளாக் பாண்டி. இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு வெள்ளித்திரையில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைத்தது.
குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு எங்கே இருக்கிறார் என்று தெரியாது அளவிற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.