40% சொத்தும் போச்சு இப்ப குணசேகரன் பொண்டாட்டியும் போச்சு.. காதலை வைத்து ஆடுபுலி ஆட்டம் ஆடும் ஜீவானந்தம்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனை பார்த்து பேசி சட்ட ரீதியாக ஜீவானந்தத்திற்கு பதிலடி கொடுக்கலாம் என்று வக்கீல் வந்து ஆலோசனை கொடுக்கிறார். இதற்கிடையில் கரிகாலன் எப்பொழுதும் போல நக்கல் கலந்த பதிலை சொல்லி அங்கே இருப்பவர்களுக்கு இடையூறு கொடுத்து வருகிறார். அடுத்ததாக இதை கேட்டுக் கொண்டிருக்கும் நந்தினியை போட்டுக் கொடுக்கிறார்.

பிறகு ஒரு வழியாக இவர்களுடைய பஞ்சாயத்து முடிந்த நிலையில் ஜனனி, என்ன தான் குணசேகரன் பிளான் பண்ணாலும் ஜீவானந்தத்தை சந்திக்காமல் எந்த ஒரு விஷயமும் அவருக்கு சாதகமாக நடக்காது என்று கூறுகிறார். கூடிய சீக்கிரமே நான் ஜீவானந்தத்தை பார்த்து என்ன செய்யணுமோ அதற்கு ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொல்கிறார். அடுத்தபடியாக நந்தினி நானும் உன் கூட வரேன் சும்மா தானே இருக்கேன் என்று கூறுகிறார்.

Also read: பகல் கனவு காணும் ஜனனி.. கரிகாலனிடம் இருக்கும் மூளையில் பாதி கூட குணசேகரனிடம் இல்ல

அதற்கு ஜனனி உங்களுக்கும் கூடிய விரைவில் ஒரு காலம் வரும் அப்பொழுது நீங்கள் யார் என்று நிரூபிக்க போறீங்க என்று நம்பிக்கை கொடுக்கிறார். இதனை அடுத்து ஈஸ்வரி நிலம் விஷயமாக அவருடைய அப்பா வீட்டிற்கு போன அனைத்தும் நல்லபடியாக முடிந்து விட்டது. ஆனால் ஈஸ்வரி அப்பாவிற்கு மட்டும் குணசேகருக்கு பக்கவாதம் கிடையாது நடிக்கிறார் என்று சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி எது எப்படியோ ஜீவானந்தம் பண்ணுவது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. மொத்த சொத்தையும் அப்பத்தா கைரேகை வைத்து அவர் பெயரில் மாற்றி வைத்தது சரியே இல்லை, இதைப் பற்றி அவரிடம் பேசலாம் என நினைத்தேன். ஆனால் அதற்கு அவர் பேச முடியாது என்று சொல்லிவிட்டார் என்று கூறுகிறார். இந்த சமயத்தில் செம மாஸ் என்ட்ரி கொடுத்து வருகிறார் ஜீவானந்தம்.

Also read: குணசேகரனுக்கு சரியான ஆப்பை வைத்த ஜீவானந்தம்.. அம்மாடி ஜனனி இதுல நீ என்ன பண்ண போற?

ஏற்கனவே இவர்கள் இருவரும் எக்ஸ் காதலர்கள் என்று தெரிந்தாலும், தற்போது என்டரி கொடுத்ததை பார்க்கும்போது ஜீவானந்தம் எல்லா இடத்திலும் கலக்கி கைதட்டளை வாங்கி விடுகிறார். இவரை பார்த்து ஆச்சரியமாக ஈஸ்வரி நிற்கிறார். இதனை அடுத்து தற்போது வெளிவந்த ப்ரோமோ படி ஜீவானந்தமும் ஈஸ்வரியும் தனியாக பேசுகிறார்கள். அப்பொழுது கோபத்தின் வெளிப்பாடாக ஈஸ்வரி பேசும்போது, ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு இவ்வளவு கோபம் வராதே என்று சொல்கிறார்.

அடுத்தபடியாக குணசேகரனை கல்யாணம் பண்ணுவதற்கு முன்னாடி உங்க அப்பா கிட்ட வந்து பேசின பையனை ஞாபக வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை. அவன் பெயர்தான் ஜீவானந்தம் என்று சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியில் கண்கலங்கிய படியே ஈஸ்வரி இருக்கிறார். ஆக மொத்தத்தில் குணசேகரனின் 40% சொத்தும் போச்சு இப்ப பொண்டாட்டியும் போச்சு. இதன் பிறகுதான் ஜீவானந்தத்தின் உண்மையான ஆடுபுலி ஆட்டமே ஆரம்பிக்கப் போகிறது.

Also read: அடுத்த கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போடும் குணசேகரன்.. டம்மியாக இருந்து வேடிக்கை பார்க்கும் ஜனனி