அஜித்தின் இடம் அடுத்தது கவினுக்கு தான்.. 3 படத்துக்குகே இவ்வளவு பெரிய பில்டப்பா!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கவின். அதன் பின்பு சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பிக் பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற கவின் சில ஏடாகூடமான விஷயங்கள் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

விஜய் டிவியில் பணியாற்றி விட்டு வெள்ளித்திரையில் ஜொலிக்கும் சிவகார்த்திகேயன் போல் வர வேண்டும் என கவின் வெளித்திரையில் கால் பதித்தார். அதன்படி முதலில் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த கவின் அதன் பின்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் ஆரம்பத்தில் அவர் படங்கள் சரிவர போகாத நிலையில் லிப்ட் படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் டாடா படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதில் நிறைவை ஏற்படுத்தி உள்ளது.

அதிலும் குறிப்பாக கவின் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகராக மாறி உள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கவினின் நடிப்பை பார்க்கும் போது ஆரம்பத்தில் அஜித்தை பிரதிபலிப்பது போல உள்ளது.

ஏனென்றால் யாருடைய உதவி இன்றி தன்னுடைய உந்துதலின் பெயரில் முன்னுக்கு வந்தவர் அஜித். அதேபோல் தான் தன்னுடைய கடின உழைப்பால் கவின் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். எனவே அஜித்தின் இடம் அடுத்ததாக கவினுக்கு தான் என்று பயில்வான் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கவின் எளிமையான நடிப்பு மற்றும் ஓவர் ஆக்சன் இல்லாமல் அனைவருக்கும் பிடித்த முகமாக அஜித்தை டாடா படத்தில் ஞாபகம் படுத்தி இருக்கிறார் என்று பயில்வான் கூறியுள்ளார். பல ஹிட் படங்கள் கொடுத்து அஜித்தின் இடத்தை பிடிக்க வேண்டும் என நடிகர்கள் வரிசையில் நிற்கும்போது மூன்று படம் நடித்து விட்டு கவினுக்கு இவ்வளவு பில்டப் கொடுப்பதா என பயில்வானை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.