அப்பத்தாவை வைத்து குணசேகரன் போடும் திட்டம் பலிக்குமா.? கொலைகாரன் கதிருக்கு ஜனனி வைக்கும் செக்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொரு எபிசோடும் இருக்கிறது. முக்கால்வாசி சீரியல்களில் இந்த மாதிரி தான் கதை வரும் என்று பார்ப்பவர்கள் அனைவராலும் யூகிக்க முடியும். ஆனால் இந்த நாடகத்தில் மட்டும் என்ன நடக்கப் போகிறது என்பதை யோசிக்கக்கூட முடியாத அளவிற்கு கதை ட்விஸ்ட்டாக மாறிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் கதிர் தற்போது திருந்திடுவாரு என்று எதிர்பார்த்தோம் ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரத்தில் ஜீவானந்தத்தை கொலை செய்ய போகும்போது அதில் கதிர் மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்த்தோம் அதுவும் நடக்கவில்லை. சரி அப்பத்தா எழுந்த பிறகு குணசேகரன் ஆட்டம் மொத்தமும் அடங்கிவிடும் என்று எதிர்பார்த்தால், அப்பத்தாவை மிரட்டி ஜீவானந்தத்திற்கு எதிராக கையெழுத்தை வாங்கி விட்டார்.

இப்படி தொடர்ந்து குணசேகரனுக்கு ஏத்த மாதிரியே எல்லா விஷயங்களும் நடந்து கொண்டு வருகிறது. ஜனனி வீட்டிற்கு வந்த பிறகு நடந்த விஷயத்தை மருமகளிடம் சொல்லி ஜீவானந்தம் ரொம்ப நல்லவர் என்று கூறுகிறார். இதை கேட்டதும் ஈஸ்வரி, ஜீவானந்தத்தின் மனைவியை நினைத்து ரொம்பவே வருத்தமாக கண்ணீர் வடிக்கிறார். அதன் பின் அப்பத்தாவிற்கு உடல்நிலை சரியாகி விட்டது என்று நந்தினி கூறுகிறார்.

இதைக் கேட்டதும் ஜனனி நான் அப்பத்தாவிடம் கேட்டு எல்லா விஷயத்தையும் தெரிந்து கொள்கிறேன் என்று அப்பத்தாவை பார்ப்பதற்கு போகிறார். ஆனால் அங்கே வாட்ச்மேன் மாதிரி குணசேகரன் காவல் காத்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் ஜனனியை அப்பத்தாவை பார்ப்பதற்கு அனுமதி கொடுக்க மாட்டார். ஜனனி பார்க்கக்கூடாது என்று தான் பைத்தியக்காரன் போல் குணசேகரன் ஒவ்வொரு வேலையும் பார்த்து வருகிறார்.

இதனை தொடர்ந்து இவர்களிடம் இருந்து அப்பத்தாவை மறைத்து வைக்க வேண்டும் என்பதற்காக கதிர் மூலமாக இவருடைய கஸ்டடிக்கு கொண்டு போய்விட்டார். ஆனால் இவர் மேல் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அப்பத்தா எங்கே என்று வீட்டில் இருக்கும் பெண்களிடம் அதட்டி உருட்டுகிறார். இதற்கு இடையில் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு காரணம் கண்டிப்பாக குணசேகரன் மற்றும் கதிர் ஆகத்தான் இருப்பார்கள் என்று மருமகள்கள் அனைவருக்கும் சந்தேகம் வந்துவிட்டது.

இதற்குப் பிறகு அப்பத்தாவை வைத்து ஜீவானந்தத்திற்கு எதிராக குணசேகரன் போடும் பிளான் அனைத்தையும் தவிடு பொடியாக ஆக்கப் போகிறார் நந்தினி மற்றும் ஜனனி. அத்துடன் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து அதன் மூலம் கதிருக்கு  சரியான தண்டனை பெறுவதற்கு கூடிய விரைவில் ஏற்பாடுகள் நடக்கப் போகிறது. இதற்கு குணசேகரன் என்ன பண்ணப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →